Header Ads



எம்மிடம் 4 யோசனைகள் உள்ளன - ஞானசாரர்

ஜனாதிபதி தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிடத் தயாராகவுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமாயின் நாம் அதில் தனித்துப் போட்டியிடத் தயாரகவுள்ளோம். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சியும் பௌத்த மத்திற்கு முன்னுரிமை கொடுக்காதவிடத்து, நாம் பௌத்த மத பாரம்பரியங்களை முன்னிறுத்தி ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவோம்.

தேர்தலில் களமிறங்குவதற்கு நான்கு யோசனைகள் எம்மிடமுள்ளன. இவை அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது, எதிரணியுடன் இணைந்து போட்டியிடுவது, இரண்டுக்கும் சார்பில்லாது ஒதுங்கியிருப்பது, நாம் தனித்து ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது. 

யுத்தத்தின் பின்னராவது நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு எவரும் முன்வராத நிலையில் நாட்டில் மீண்டும் குழப்பத்தை உண்டு பண்ணவே முயற்சிக்கின்றனர்.
இதேவேளை, நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஒரு இலட்சம் வாக்குகளையாவது பெறுவோம். அவ்வாறு ஒரு இலட்சம் வாக்குகளைப் பெற்றாலும் எம்மால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.