Header Ads



எவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், நிபந்தனையில் அடிப்படையிலேயே ஆதரவளிக்கப்படும் - முஸ்லிம் காங்கிரஸ்

எவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவர்களுக்கு நிபந்தனையில் அடிப்படையிலேயே ஆதரவளிக்கப்படுமென முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் தரும்போது,

மிகவிரைவில் முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது. இது ஜனாதிபதி தேர்தலை மாத்திரம் அடிப்படையாக கொண்டிருக்காது. பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசுவோம். குறிப்பாக முஸ்லிம் நலன் குறித்து பேசுவோம்.

முஸ்லிம்கள் நெருக்கடியை எதிர்நோக்கும், நிலையிலும், தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையிலும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து எவரும் பல்டி அடிக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.

எது எப்படியிருந்த போதிலும் ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடத்தப்படும் போது, அதுகுறித்து குறித்த கட்சிகளின் ஜனாதிபதி வேட்பளர்களுடனும் பேச்சு நடத்துவோம். முஸ்லிம்களின் நலகள் குறித்து பேசுவோம். எமக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் உண்டு. அதனால் நிச்சயமாக எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆதரவு வழங்குவோம் எனவும் ஹசன் அலி மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. உங்களுக்கு கசப்பான அனுபவமா? அல்லது முஸ்லிம் மக்களுக்கு கசப்பான அனுபவமா?

    நீங்களும் உங்கள் தலைமையும் முஸ்லிம்களின் உரிமை சம்பந்தமாகவும், நாட்டின் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாகவும் என்ன காத்திரமான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பது எல்லோருக்கும் வெட்ட வெளிச்சம். ராஜபக்ச அன் கோ வுடன் நீங்கள் செய்து கொண்ட நிபந்தனைகளுக்கு என்ன நடந்தது????

    நீங்களும் உங்கள் தலைமையும் ரணிலுடன் செய்து கொண்ட புரிந்துணர்வுகளுக்கு நீங்களும் உங்கள் தலைமையும் நடந்து கொண்ட நாணயமான (நம்பக தன்மை ) நடவெடிக்கைகள் என்ன?

    உங்களதும் உங்கள் தலைமையினதும் நம்பக தன்மை என்ன??

    இவற்றுக்கெல்லாம் மனசாட்சியுடன் கூடிய பதில்களை முஸ்லிம்கள் ஆகிய நாம் எதிர்பார்க்கிறோம்?

    ஊவா மாகான மக்கள் உங்களை புறந்தள்ளி உள்ளார்கள் என்பதை மனதில் கொள்ளவும்.

    ReplyDelete

Powered by Blogger.