இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவிரோத செயற்பாடுகளின் தற்போதைய நிலை - லண'டனில் அமீன்
(Mohammad Shafeek)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் ஸ்தாபகத் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான சகோதரர் அல் ஹாஜ் N M அமீன் அவர்கள் சென்ற செப்டம்பர் மாதம் நடுப் பகுதியில் இங்கிலாந்துக்கு விஜயம் ஒன்றை மேட்கொண்டிருந்தார். இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் செறிந்து வாழும் இலங்கை முஸ்லிம்களுடன் தொடரான சந்திப்புக்களிலும் கலந்துரையாடல்களிலும் ஈடு பட்டு வருகின்ற அவர் நேற்று சனிக்கிழமை 11/10/2014 அன்று லெஸ்டர் நகரில் வாழும் இலங்கை முஸ்லிம்களுடன் மஸ்ஜிதுல் அப்ராரில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் ஈடு பட்டிருந்தார். திறந்த கலந்துரையாடலாக நடை பெற்ற குறித்த நிகழ்ச்சிக்கு அஷ் ஷெய்க் ரபீக் (நளீமி) அவர்கள் தலைமை தாங்கி இருந்தது குறிப்பிடத் தக்கது.
அண்மைக் காலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாக நடாத்தப்பட்டு வரும் இனவிரோத செயற்பாடுகளின் தற்போதைய யதார்த்த நிலை பற்றி தெளிவு படுத்துவதும் இலங்கை முஸ்லிம்களும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தும் வாழுகின்ற இலங்கை முஸ்லிம்கள் சகோதரர்களும் குறித்த இனவிரோத செயற்பாடுகளை வெற்றி கொள்வதில் எவ்வாறான அணுகுமுறைகளைக் கடை பிடிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை வழங்குவதுமே இச் சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.
அங்கு தமது கருத்துக்களை வழங்கிய சகோதரர் அமீன்,
குறித்த இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் மிகச் சிறிய குழுக்களே செயற்படுவதாகவும் இலங்கை முஸ்லிம்களின் சுமார் 1200 வருட கால வரலாற்றை நோக்குமிடத்து அங்கு வாழும் பெரும்பான்மையான பௌத்த சகோதரர்கள் வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களுடன் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் சுமூகமான உறவைப் பேணியுமே நடந்து வந்திருக்கின்றனர் என்பதை முஸ்லிம் சமூகம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறித்த இனவாதப் பிரச்சினையை மிகவும் நுணுக்கமாகவும் நிதானமாக்கவுமே எதிர் கொள்ள வேண்டும் என்றும் மொத்த யூத இனமும் முஸ்லிம்களை எவ்வாறு வெறுப்புக் கண்கொண்டு பார்கின்றனரோ அதுபோன்றதொரு எண்ணக்கருவை முழு பௌத்த சமூகத்தின் உள்ளத்திலும் விதைத்து விடாமல் இருப்பதுடன் குறிப்பாக பெரும்பான்மை சமூகத்துடனும் நாட்டின் அனைத்து சமூகங்களுடனும் நல்லுறவைப் பேணி சகவாழ்வை ஏற்படுத்திக் கொள்வதே நாம் எதிர்கொண்டிருக்கின்ற இனப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையும் என்பதையும் அங்கு வழியுறுத்தினார்.
தொடர்ந்து கருத்துக்களை வழங்கிய அமீன் அவர்கள் குறித்த பிரச்சினை விடையத்தில் போராட்ட அணுகுமுறைகள் ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை என்றும் அனைத்து சமூகங்களுடனும் நல்லுறவைப் பேணி சகவாழ்வை ஏற்படுத்திக் கொள்ளும் அழகிய பண்புகளைக் கொண்டே எமது மூதாதையர்கள் எம்மை வழிநடாத்தி வந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டதோடு அதே வழிமுறையைக் கையாண்டே அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவும் முஸ்லிம் கவுன்சிலும் ஷூரா சபையும் பயணித்துக் கொண்டிருப்பதாக தெளிவு படுத்தினார்.
ஊடகத் துரையின் அவசியத்தை அங்கு வழியுருத்திய அமீன் அவர்கள் ஏராளமான வானொலி சேவைகளும் தினசரிப் பத்திரிகைகளும் தொலைக் காட்சி சேனல்களும் நாட்டில் இயங்கி வருகின்ற போது எம்மைப் பற்றிய, எமது சமூகத்தைப் பற்றிய செய்திகளை வெளியே சொல்வதற்கும் எமக்கு ஏற்படுகின்ற அவலங்களை வெளிக் கொணர்வதற்கும் போதுமான எந்த ஊடகமும் எமது நாட்டில் முஸ்லிம் சமூகத்திடம் இல்லை என்பதை புள்ளி விபரங்களுடன் அங்கு சுற்றிக் காட்டியதோடு 1880 களில் முஸ்லிம் நேஷன் என்ற பத்திரிகையை தொடராக வெளியிட்டு வந்த மர்ஹூம் சித்தி லெப்பை அவர்கள் அதனூடாக நாட்டு முஸ்லிம்களின் கல்விக் கண்ணை திறந்து விட்டிருந்தார் என்றும், துரதிஷ்டவசமாக அதன் பின்பு இன்று வரை ஒரு நாளாந்த பத்திரிகையையேனும் எமது சமூகத்தால் நடாத்திக் கொள்ள முடியவில்லை என்றும், எமது சமூகத்துக்கான பலமான தேசிய ஊடகம் ஒன்றின் அவசரமும் அவசியமும் என்ன என்பதையும் அங்கு விபரித்தார்.
எமது நாட்டில் சிங்கள, ஆங்கில மொழிகளிலான நாளாந்த பத்திரிக்கை ஒன்றை மிக விரைவில் எமது சமூகம் ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கோடு அதற்கான முதல் நடவடிக்கையாக குறித்த கூட்டத்தில் சிலரால் சிறிதளவு பண அன்பளிப்பு செய்யப் பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டதும் குறிப்பிடத் தக்கது. இறுதியாக தமது கருத்துக்களை முன்வைத்த அல் ஹாஜ் N M அமீன் அவர்கள் சமூகத்தில் கருத்து முரண்பாடுகள் என்பவை தவிர்க்க முடியாதவை எனினும் பொது விடையங்களை கையாள்வதற்கு நாம் ஒரு சம்மேளனத்தை ஏற்படுத்தி அதனூடாகவே செயற்பட வேண்டும் என்றும் வழியுறுத்தினார்.
அங்கு தமது கருத்துக்களை வழங்கிய அஷ் ஷெய்க் ரபீக் (நளீமி) அவர்கள் நாம் எமது பிள்ளைகளை டாக்டர்களாகவும், பொறியியலாளர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் உருவாக்குவதில் கூடிய கவனம் செலுத்தி வரும் அதே வேலை இன்று உலகின் மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள ஊடகத் துறை சார்ந்த கர்கைகளைத் தொடர்வதற்கு எமது பிள்ளைகளுக்கு எவ்வித ஊக்கமும் அளிப்பதில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
மக்ரிபுத் தொழுகையோடு ஆரம்பமான கலந்துரையாடலானது இடையே இஷா தொழுகையுடன் 09. 30 மணிவரை தொடர்ந்தது. ஏற்கனவே ஹெரோ, க்ரோவ்லி, ஸ்லாவ் நகர இலங்கை முஸ்லிம்களுடனான சந்திப்புக்கள் நிறைவுற்றுள்ள நிலையில் இன்று ஞாயிறு 12/10/2014 மாலை மக்ரிபுத் தொழுகையுடன் ஈஸ்ட் ஹெய்ம் ( கிழக்கு லண்டன்) வாழ் இலங்கை முஸ்லிம்களுடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறித்த கலந்துரையாடல்கள் அனைத்தும் அஷ் ஷெய்க், அல் ஹாபிள் எம் இஸட் எம் ஷபீக் அவர்களால் ஒழுங்கு செய்யப் பட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
.jpg)
Ippadiyana kalanduraiyaadalkal muslimgalukku avasiyamaahum
ReplyDelete