Header Ads



சில புதியவர்கள் என்னை வெட்டப் பார்க்கின்றனர், நாட்டின் ஜனாதிபதியாக என்னிடம் தகுதியுண்டு - மேர்வின் சில்வா

நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியுண்டு என பொது மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடாவிட்டால் அந்தப் பதவிக்காக போட்டியிடக் கூடிய தகுதி தமக்கு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தொலைக்காட்சி ஊடகமொன்றின் செய்தி சேவைக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் தமக்கு இருந்த பலம் குறைந்து விட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சில புதியவர்கள் தம்மை வெட்டப் பார்ப்பதாகவும், தம்மை ஓரம் கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க குடும்பத்தினரும் ராஜபக்ஸ குடும்பத்தினரும் தம்மை நேசிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஸ குடும்பத்தினர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடாத சந்தர்ப்பத்தில் அதற்கான சிறந்த தகுதிகளை உடைய ஒரே ஒருவர் தாமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மை ஓரம் கட்ட நினைப்பவர்கள் முயற்சிப்பவர்கள் பற்றி இப்போது அம்பலப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

நேரம் வரும்போது அவர்கள் பற்றிய விபரங்களை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் தம்மை ஒதுக்க நினைப்பவர்கள் பற்றி கருத்து வெளியிட்டால் அது தமது அரசியல் வாழ்க்கைக்கு பாதக நிலைமைகளை ஏற்படுத்தக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

1 comment:

  1. சீட்டுக்கட்டிலுள்ள ஜோக்கர் கார்டுகளுக்கும் சிலவேளை கிங் ஆகும் ஆசை வருவதை இப்போதுதான் தெரிந்து கொள்கின்றேன். சரி, காண்பது கனவுதானே.. பெரிதாகவே காணுவோம் என்று நினைத்திருப்பார் போல..

    ReplyDelete

Powered by Blogger.