இந்த செய்திக்கு ஒரு 'தலைப்பு' தேவை...!
(Un)
ஆணை அல்லது பெண்ணை தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்பாத பெண் ஒருவர், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட விநோதச் சம்பவம் நடந்துள்ளது.
ஆணும், பெண்ணும் திருமணம் எனும் பந்தம் மூலம் இணைந்து வாழ்க்கையை வழி நடத்த வேண்டும் என்பது நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த வழக்கம். ஆனால், சிலர் அதிலிருந்து வேறுபட்டு ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதுண்டு.
இத்தகைய ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு இன்னும் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இவர்கள் அனைவரிலிருந்தும் வேறுபட்டு தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளார் இங்கிலாந்து பெண் ஒருவர்.
இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் இளம்பெண் கிரேஸ் ஹெல்டர். புகைப்பட கலைஞரான இவருக்கு ஒரு ஆணையோ, பெண்ணையோ திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லையாம்.
இதனால், கடந்த 6 ஆண்டுகளாக தனக்கு தானே காதலை வளர்த்துக் கொண்டு வந்த இவர் தன் காதலின் அடுத்த கட்டமாக தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்தார்.
நிச்சயிக்கப்பட்டபடி, தனது திருமண நாளன்று டேவன் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 50 பேரை அழைத்து, அவர்களுக்கு விருந்து அளித்தார்.
பின்னர் கண்ணாடி முன்பு நின்று கொண்டு தனக்குத் தானே மோதிரத்தை அணிவித்து திருமணம் செய்து கொண்ட பின்பு கண்ணாடியில் தோன்றிய தனது உருவத்துக்கு தானே முத்தம் கொடுத்து அன்பையும் பறிமாறிக் கொண்டார்.
கிரேசின் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், இது வித்தியாசமான திருமணத்தைப் பார்த்த அனுபவத்தைத் தந்ததாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதை சரியான ஒரு மனோதத்துவ வைத்தியரிடம் காட்டி பரிசீலித்து உரியதைச் செய்யாமல் நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கின்றீர்.
ReplyDeletePuliyanam
ReplyDeleteone hart marriage or self life marriage or mirror life
ReplyDeletekannadi kalyanam
mental
ReplyDelete