Header Ads



'சஜித்' இந்த முட்டாள் வேலையை செய்யாதீர்கள்...!

-Gtn-

சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களை அதிகாலை 4 மணிக்கு  ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவர் சஜித் பிரேமதாசா தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது- இவ்வாறு தொலைபேசி அழைப்பை விடுத்த அவர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரிடம் வேண்டிக்கட்டிக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவின் ஆதரவாளர்களை ஐக்கிய தேசிய கட்சிக்குள் இழுப்பதற்க்கு அதன் புதிய பிரதிதலைவர் சஜித் பிரேமதாசா தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

சரத்பொன்சேகாவின் ஜனநாயக கட்சியின் மாகாணசபை மற்றும் பிரதேசபை  உறுப்பினர்களை அவர் தொடர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சீற்றமடைந்துள்ள சரத்பொன்சேகா இது குறித்து கட்சிதலைமக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்த சரத்பொன்சேகா இணையத்தளமொன்றிற்க்கு தெரிவித்துள்ளதாவது..

சஜித் என்னுடைய கட்சி பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை அதிகாலை 4 மணிக்கு தொடர்புகொண்டு ஐக்கிய தேசியக்கட்சியில் சேருமாறு கேட்டுள்ளார்.

தனது தந்தையை போன்று அதிகாலை 4 மணிக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொன்சேகா கட்சிக்கு எதிர்காலமில்லை, ஊவாவில் அவர்களால் எதனையும் சாதிக்கமுடியவில்லை, 1000 வாக்குகளை கூட பெறமுடியவில்லை, என்றெல்லாம் தெரிவித்து அந்த உறுப்பினரை தனது கட்சியில் சேருமாறு கோரியுள்ளார்.

இதனால் சீற்றமடைந்த அந்த உறுப்பினர்—சஜித் உங்கள் தந்தை நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதற்காகவே 4 மணிக்கு தொலைபேசி அழைப்பகளை மேற்கொண்டார், நீர் இன்னமும் பிரதிதலைவர்தான், நீர் இப்படி 4 மணிக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டால் உங்கள் கட்சியிலுள்ளவர்களே ஓடிவிடுவார்கள்- இந்த முட்டாள் வேலையை செய்ய வேண்டாம் என தெரிவித்ததாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.