ரோஹிங்கியா முஸ்லிம்களை, மியான்மர் அரசு கடுமையான சித்திரவதைக்குள்ளாக்குகிறது..!
போராளி இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்குவதாக தாய்லாந்தை மையமாக கொண்டு இயங்கு மனித உரிமை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
வங்காளதேச எல்லைப்பகுதியில் உள்ள வடகிழக்கு கிராமங்களில் ராணுவத்தின் கொடிய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று அராகன் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவிக்கிறது.’தனது கணவரின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்று எழுதி தருமாறு போலீஸ் நிர்பந்திக்கிறது’ என்று கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். ராகேன் மாநிலத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் கிராமங்களில் கடந்த 2 வாரங்களில் வீடுகளை சுற்றி வளைத்து 58 முஸ்லிம்களை போலீஸ் காவலில் எடுத்துள்ளது.ரோஹிங்கியா சோலிடாரிட்டி ஆர்கனைசேசன்(ஆர்.எஸ்.ஒ) என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி போலீசும், உளவுத்துறையும் முஸ்லிம் இளைஞர்களை தீவிரமாக வேட்டையாடி வருகின்றன.
ஆர்.எஸ்.ஓ என்ற அமைப்பைக் குறித்து உள்ளூர் மக்களுக்கு எதுவும் தெரியாது.ஆனால், வங்காளதேச எல்லைப்பகுதியில் நடக்கும் தாக்குதல்களுக்கு ஆர்.எஸ்.ஓ தான் காரணம் என்று மியான்மர் அரசு குற்றம் சாட்டுகிறது.செக்போஸ்டுகளிலிருந்து அவ்வேளையில் கிராமங்களுக்குள் நுழையும் பாதுகாப்பு படையினர் வீடுகளை சுற்றி வளைத்து முஸ்லிம் ஆண்களை எவ்வித காரணமுமின்றி காவலில் எடுக்கின்றனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான பாரபட்சம் நடப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் என்று குற்றம் சாட்டி மியான்மர் ராணுவம் 1990களில் ரோஹிங்கியா முஸ்லிம்களை வங்காளதேசத்திற்கு புலன்பெயர்ந்து செல்லுமாறு நிர்பந்தித்த காலக்கட்டத்தில் ஆர்.எஸ்.ஓ உருவானது.ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இவ்வமைப்பு இயங்கவில்லை என்று ரோஹிங்கியா மக்களுக்கு ஆதரவு கட்சியான நேசனல் டெமோக்ரேடிக் பார்டி ஃபார் டெவலப்மெண்டின் வெளியுறவு விவகார தலைவர் கின் மாவூங் மிண்ட் தெரிவித்தார்.எல்லையில் நடக்கும் தாக்குதல்களும், ஆர்.எஸ்.ஓவைக் குறித்த கதைகளும் அரசின் சதித்திட்டம் என்றும் இதனை அரசு திரையாக பயன்படுத்துவதாகவும் மாவூங் மிண்ட் குற்றம் சாட்டுகிறார். tHOO

Post a Comment