''எனது முகத்தில் இருந்த கட்டியை அகற்றிய பிறகுதான், சந்தோஷமாக இருக்கிறேன்''
காங்கோ நாட்டில் வசிக்கும் 17 வயதான இளம்பெண்ணின் முகத்தில் புட்பால் சைஸில் கட்டி ஏற்பட்டது. இதனால் அவருக்கு மூச்சு திணறும் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது.காங்கோ குடியரசின் தலைநகர் கின்சஹாசாவுக்கு அருகே புறநகர் பகுதியில் வசிப்பவர் கிரேஸ் (17). சில ஆண்டுகளுக்கு முன் கிரேஸின் வாய் பகுதியில் ஒரு கட்டி ஏற்பட்டது. நாட்கள் செல்ல செல்ல அந்த கட்டி வளர்ந்து புட்பால் அளவுக்கு பெரிதானது. இதனால் அவரால் சாப்பிட முடியவில்லை. மூச்சு திணறும் நிலை ஏறுபட்டது. மற்றவர்களின் கேலிக்கு பயந்து வீட்டுக்குள்ளே கிரேஸ் முடங்கினார்.ஏழை குடும்பத்தை சேர்ந்த கிரேஸின் முகத்தில் புட்பால் சைஸுக்கு வளர்ந்திருக்கும் கட்டி குறித்து, அப்பகுதி கிறிஸ்தவ தேவாலய பாதிரியாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஆப்பிரிக்க பகுதிகளில் ஏழை மற்றும் தனித்து விடப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஆப்பிரிக்கா மெர்சி என்ற மருத்துவ கப்பலுக்கு தகவல் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆப்பிரிக்கா மெர்சி கப்பல் கடந்த 2 நாட்களுக்கு முன் கின்சஹாசா நகர துறைமுகத்துக்கு வந்தது. அக்கப்பலில் கிரேஸியை டாக்டர் கேரி பார்க்கர் பரிசோதனை செய்தார். பின்னர், கப்பலில் 4 மணி நேரம் கிரேஸிக்கு நடைபெற்ற ஆபரேஷன் மூலம் புட்பால் சைஸ் கட்டி அகற்றப்பட்டது.கப்பலில் கிரேஸிக்கு நடைபெற்ற ஆபரேஷன் மூலம் கீழ்தாடை பகுதி அகற்றப்பட்டது. தற்போது அங்கு பிளாட்டினம் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அவளது முக தோற்றம் சிறிது மாறுபட்டாலும், மிக விரைவில் அவளுக்கு பழைய நிலை திரும்பிவிடும் என்று டாக்டர் கேரி பார்க்கர் கூறினார். எனது முகத்தில் இருந்த கட்டியை அகற்றிய பிறகுதான் சந்தோஷமாக இருக்கிறேன். மிக விரைவில் டாக்டருக்கு படித்துவிட்டு, ஆப்பிரிக்க மெர்சி மருத்துவ கப்பல் மூலம் ஏழை மக்களுக்கு உதவி செய்வேன் என்று கிரேஸ் கண்ணீருடன் கூறினாள்.

Post a Comment