Header Ads



ஹெல உறு­ம­யவிற்கு, ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு...!

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்து நாட்டில் நல்­லாட்­சி­யையும் ஜன­நா­ய­கத்­தையும் உறு­திப்­ப­டுத்தும் வகையில் மேற்­கொள்­ளப்­படும் வேலைத்­திட்­டத்தில் ஜாதிக ஹெல உறு­ம­ய­வையும் இணைந்­து­கொள்­ளு­மாறு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திஸ்ஸ அத்­த­நா­யக்க அழைப்பு விடுத்­துள்ளார்.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழித்து 17 ஆவது திருத்தச் சட்­டத்தை மீண்டும் ஏற்­ப­டுத்த வேண்­டு­மென ஜாதிக ஹெல உறு­மய அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­யி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால், இதனை இந்த அர­சாங்கம் ஒரு­போதும் செய்யப் போவ­தில்லை. எனவே, இந்தத் திட்­டத்தை தொடர்ந்தும் வலி­யு­றுத்­தி­வரும் எம்­முடன் கை­கோர்ப்­பதே சிறந்­தது எனவும் அவர் தெரி­வித்தார்.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்கி 17 ஆவது திருத்தச் சட்­டத்தை ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மென ஜாதிக ஹெல உறு­ம­யவின் உப தலைவர் அத்­து­ர­லிய ரத்தன தேரர் அர­சாங்கத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். இது தொடர் பில் ஐ.தே.கட்­சியின் பொது செய­லாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திஸ்ஸ அத்­த­நா­யக்க கருத்து தெரி­வித்த போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தான எதிர்க்­கட்சி என்ற வகையில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்கி 17 ஆவது திருத்தச் சட்­டத்தை மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்தி நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டத்தை நாம் ஏற்­க­னவே ஆரம்­பித்­துள்ளோம். அது தொடர்பில் பல்­வேறு கட்­சி­க­ளு­டனும் அமைப்­புக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் பேச்­சு­வார்த்­தை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்றோம்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ இது­வ­ரையில் அந்த வாக்­கு­று­திகள் எத­னையும் நிறை­வேற்­ற­வி்ல்லை. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தற்­கான நல்­ல­தொரு சந்­தர்ப்பம் அவ­ருக்கு உள்­ளது. ஆனால், அதனை அவர் ஒரு­போதும் செய்­ய­மாட்டார் என்­பது தெட்டத் தெளி­வா­கி­யுள்­ளது.

அர­சாங்­கத்­தி­லுள்ள சில இட­து­சா­ரிகள் இதனை வலி­யு­றுத்தி வந்த நிலையில் தற்­போது ஜாதிக ஹெல உறு­ம­யவும் அந்தப் பட்­டி­யலில் இணைந்­துள்­ளது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிக்க வேண்­டு­மென்ற உண்­மை­யான நோக்­கமும் தேவையும் ஹெல உறு­ம­ய­வுக்கு இருக்­கு­மானால் அவர்கள் எம்­மோடு இணை­யலாம்.

நாட்டின் ஜன­நா­ய­கத்­துக்கு சவாலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் இந்த நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்கி, சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை ஏற்­ப­டுத்தி, நல்­லாட்­சியை உறு­திப்­ப­டுத்­து­வதே எமது நோக்கம். அதற்­கான வேலைத்­திட்­டங்­களை தொடர்ந்தும் முன்­னெ­டுப்போம் எனவும் அவர் குறி்ப்­பிட்டார்.

No comments

Powered by Blogger.