Header Ads



அடிப்படைவாதிகளின் தேவைகளுக்காகவே குர்ஆன் பிரதிகளை கோரியுள்ளனர் - முஜிபுர் ரஹ்மான்

அல்குர்ஆன் அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் ஐ. தே.க. வின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆனை கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்களின் மத விவகாரங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமையகத்திற்கு அண்மையில் சென்றிருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இருவர் குர் ஆன் பிரதி ஒன்றையும் அதன் மொழிப்பெயர்ப்பு பிரதியொன்றையும் வழங்குமாறு உலமா சபையின் தலைவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

அடிப்படைவாதிகளின் தேவைகளுக்காகவே பயங்கரவாத விசாரணைப் பிரிவு குர் ஆன் மற்றும் அதன் மொழிப்பெயர்ப்பு பிரதிகளை கோருகிறது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.