Header Ads



தமிழ் எம்.பி.க்கள் குறித்த அஸ்வரின் விமர்சனம்..!

தமிழ் உறுப்பினர்கள் பாராளுமன்றை அவமரியாதை செய்து வருவதாக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாராளுமன்றின் வாகனங்களைப் பெற்றுக்கொண்டு, பாராளுமன்றில் சாப்பிட்டுவிட்டு அதன் மூலமாகக் கிடைக்கும் சம்பளம், வீடு, பொலிஸ் பாதுகாப்பு எனச் சகலவிதமான வசதிகளையும், சலுகைகளையும் ஒன்று விடாது கேட்டுப் பெற்றுக் கொள்ளும் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றை அவமரியாதை செய்கின்றனர் என அஸ்வர் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

அரசாங்கம் ஒருபோதும் தேர்தல்களுக்கு அஞ்சியதில்லை. வடக்கில் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தினோம். நாட்டில் ஜனநாயகம் ஒரே விதமாக வியாபித்துள்ளது. யாழ்தேவி ரயில் மீண்டும் யாழ்ப்பாணம் நாளை முதல் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணிக்க உள்ளது. யாழ்ப்பாணம் இன்று பாரியளவில் அபிவிருத்தி அடைந்துள்ளது. யாழ்ப்பாண மக்கள் சமாதானத்தின் பிரதிபலன்களை நன்கு அனுபவிக்கின்றார்கள்.

பொருட்கள் சேவைகளுக்கான விலைகளை குறைத்துள்ள ஆளும் அரசாங்கக் கட்சி மக்களுக்கு பெறுமதியான நிவாரணங்களை வழங்கியுள்ளது எனவும் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 250 ரூபாவினால் குறைத்துள்ளதுடன் மின்சார கட்டணத்தை 300 ரூபாவினால் குறைத்துள்ளது.

இதன் மூலம் அரசாங்கம் 550 ரூபா நிவாரணத்தை மக்களுக்கு வழங்கியுள்ளது என்றார்.

2 comments:

  1. ஆளும் கட்சி ஜால்ராவாகிய உங்களைவிடவா திரு. அஸ்வர்?

    ReplyDelete
  2. they are not like you azwer, they have at least a concept - how did u scold mahinda when u were at UNP platform few years ago, are you eating food or grass, shame for the community, you are praying towards temple trees and not towards Holy Mecca, you would again lick unp for an MP post should they come to power.do u know how to speak first, your foul mouth only brought u from acting for speaker.

    ReplyDelete

Powered by Blogger.