மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமைக்கு தலிபான்கள் கண்டனம்
பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப் சாய்க்கு நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு பாகிஸ்தானின் தலிபான் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
கல்விக்காக குரல்கொடுத்த மலாலா நம்பிக்கையில்லாதவர்களின் முகவர் எனவும் தலிபான் அமைப்பினர் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.
அத்துடன் ஆயுதங்கள் தொடர்பாகவும் போராட்டங்கள் தொடர்பாகவும் மலாலா அதிகமாக கருத்து வெளியிடுவதாகவும் தலிபான்கள் கூறியுள்ளனர்.
வெடிப் பொருட்களை கண்டுபிடித்தவரே நோபல் விருதின் நிறுவுனர் என்பதை மலாலா கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் ஆயுததாரிகள் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

நிராயுதபாணியான பாடசாலைச்சிறுமியைத் துப்பாக்கி கொண்டு அமைதியாக்க முயன்ற கோழைகள் இப்போது தங்களது முயற்சி தோற்றுப்போன அவமானத்தில் முனகுகின்றார்கள்.
ReplyDeleteசொந்த மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்கத்தெரியாத ஆயுததாரிகள் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் போவது உறுதி. இதற்கு விடுதலைப்புலிகள் சிறந்த உதாரணம்.
மலாலாவின் கருத்துகளில் இருப்பதாகக் கருதப்படும் பிறழ்வுகளை மாற்றுக்கருத்துகளால்தான் அணுக வேண்டுமே தவிர துப்பாக்கிகளைக் கொண்டல்ல என்பதை புரிந்து கொள்ளாதவர்கள் 21ம் நூற்றாண்டின் காட்டுமிராண்டிகளாகத்தான் இருக்கமுடியும்.