Header Ads



அக்கரைப்பற்றில் பழைய மாணவர் குடும்ப ஒன்றுகூடல்

(ஏ.எல்.நிப்றாஸ்) 


அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் 2001 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் கற்று வெளியேறிய பழைய மாணவர்களின் குடும்ப ஒன்றுகூடல் கடந்த சனிக்கிழமை மாலை அக்கரைப்பற்று 'ஏசியா செப்' உணவு விடுதியில் இடம்பெற்றது. 

மேற்படி கல்வியாண்டில் கற்று வெளியேறி தற்போது பல்வேறு துறைகளிலும் தொழில்புரியும் பல பழைய மாணவர்கள் குடும்ப சகிதம் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாடசாலை காலத்தின் சகபாடிகளுக்கு இடையிலான உறவைப் பலப்படுத்துவதற்காகவும் நினைவுகளை மீட்டிக் கொள்வதற்காகவும் கடந்த 13 வருடங்களில் முதன்முதலாக இவ்வாறானதொரு ஒன்றுகூடல் ஏற்பாடு இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். 

இரவுணவுடன் நிறைவடைந்த இவ் ஒன்றுகூடலில், இனிவரும் காலங்களில் வருடத்திற்கு ஒரு தடவையேனும் கிரமமான முறையில் இவ்வாறான ஒன்றுகூடலை நடாத்துவதற்கும், ஏனைய நண்பர்களையும் அதில் கலந்து கொள்ளச் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  



No comments

Powered by Blogger.