Header Ads



1990 இல் புலிகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தோண்டுவது ஒத்திவைப்பு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையோரப் பகுதியில் 1990 ஆண்டு காலப்பகுதிகளில் விடுதலை புலிகளால் கடத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் (ஜனாசாக்கள்) புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கை நவம்பர் மாதம் 24 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப் புதைகுழியை இன்று 18 ஆம் திகதி திங்கட்கிழமை தோண்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ், ஜூலை 01 ஆம் திகதி களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தபோதும் 18 இன்று திங்கட்கிழமை  கொழும்பிலிருந்து சட்ட வைத்திய நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தராத காரணத்தால்  குறித்த செய்தியை களுவாஞ்சிகுடி பொலிஸார் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதையடுத்து குறித்த மனித புதைகுழி நவம்பர் 24 ஆம் திகதி தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதன் போது களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்திற்கு புதை குழியை தோண்டுமாறு முறைப்பாடு செய்த முறைப்பாட்டாளரான காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றஊப் ஏ. மஜீத் வருகைதந்திருந்தார்.

மனித புதைகுழியை உள்ளதாக சந்தேகிக்கப்படும் இடங்களை காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகளான கெலி,பாலா ஆகியோருடன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் , புதை குழியை தோண்டுமாறு முறைப்பாடு செய்த முறைப்பாட்டாளரான காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றஊப் ஏ. மஜீத்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான பாக்கீர், அலி சப்ரி ஆகியோர் விஜயம் செய்திருந்தனர்.

அத்தோடு இன்று 18 திகதி திங்கட்கிழமை மனித புதைகுழியை உள்ளதாக சந்தேகிக்கப்படும் இடங்களை மட்டக்களப்பு நில அளவை திணைக்களத்தின் அத்தியட்சகர் தலைமையிரான குழுவினர்கள் அடையாளப்படுத்தி வருவதோடு அப் பகுதியில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கை இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.