Header Ads



''5 ஆம் ஆண்டு முஸ்லிம் மாணவர்களை பொலிஸாரைக் கொண்டு சோதனையிட்டமை கண்டிக்கத்தக்கது''

பொத்துவில் மத்திய கல்லூரியில் அமைக்கட்டிருந்த பரீட்சை நிலையத்திற்கு ஐந்தாம் தரப் புலமைப் பரீசில் பரீட்சைக்குத் தோற்றிய பொத்துவில் தாறுல் பலாஹ் வித்தியாலய மாணவர்கள் சிலரை பரீட்சை  மண்டபத்தினுள் பொலிஸாரைக் கொண்டு சோதனையிடச் செய்தமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஏ.எஸ்.எம். சலீம் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து அவர் தெரிவித்ததாவது,

நாடளாவிய ரீதியில் இன்று ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் ஏறக்குறை 2 ஆயிரத்து 800 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச  நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான பரீட்சை நிலையமாக பொத்துவில் மத்திய கல்லூரி செயற்பட்டது.

பிரதான பரீட்சை நிலையமான பொத்துவில் மத்திய கல்லூரி பரீட்சை நிலையத்திற்கு இக்கல்லூரி மாணவர்கள் உட்பட பொத்துவில் தாறுல் பலாஹ் வித்தியாலயம், அல் முனவ்வறா வித்தியாலயம், அல்- ஹிஜ்ரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த ஏறக்குறை 200 மாணவர்கள் ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சைக்காக அவ்வப்பாடசாலைகளினால் பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுடன் பரீட்சை நிலைத்திற்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், பரீட்சைக்குத் தோற்றவந்த தாறுள் பலாஹ் வித்தியாலய மாணவர்கள் சிலரை பரீட்சை மண்டபத்தினுள் வைத்து அப்பரீட்சை நிலையத்தின் பிரதம பரீட்சை நிலைய மேற்பார்வையாளரின் வேண்டுகோளின் பெயரில் பொலிசாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அக்குறித்த பாடசாலை மாணவர்கள் பரீட்சை மண்டபத்தினுள் வைத்து அச்சுறுத்தப்பட்டுமுள்ளனர்.

இதனால் அப்பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களின்; பரீட்சை எழுதுவதற்கான சூழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பரீட்சையை மன அமைதியுடன் எழுதுவதற்கு முடியாமல் போய் உள்ளதாகவும் இவ்வாறு பரீட்சை மண்டபத்தினுள் மாணவர்கள் பொலிசாரைக் கொண்டு சோதனையிடப்பட்ட சம்பவமானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதெனவும், இது குறித்து பரீட்சைத் திணைக்களமும் மாகாணக் கல்வித் திணைக்களமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் ச்ஙகம் கோரிக்கை விடுப்பதாக சங்கத்தின் செயலாளர் சலீம்  குறிப்பிட்டார்.

அத்துடன், இச்சம்பவம் குறித்து 'தாறுல் பலாஹ் வித்தியாலய புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோரின் கவனத்திற்கு' என்ற தலைமைப்பில் பொத்துவில் பிரதேசத்தில் துண்டுப்பிரசுரமொன்றும் இன்று (17) வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. இதை விட கிழ்த்தரமான எண்ணங்கள் ஒரு நாட்டில் யாருக்குத்தோன்றும்.
    காட்டு மிராண்டிகள் யார் இந்த கட்டளையை கொடுத்தது. அந்த தரங்கெட்டவனுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்காமல் விடவேண்டாம். எல்லாவிடயங்களிலும் நீண்ட நாட்களாக கைவைத்து விளையாடி வருகின்றார்கள் நாம் கவனித்தும் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் கிழக்கில் தற்போது அவர்களுக்கு கல்வியையும் பாதிப்புக்குள்ளாக்கவேண்டும் என்ற வெறியில் அலைகின்றார்கள். நாம் அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.