Header Ads



அமேரிக்க மாணவியின் பார்வையில் ''பொதுபலசேனாவும் இலங்கை முஸ்லீம்களும்''


(அஷ்ரப் ஏ சமத்)

அமேரிக்காவில் உள்ள உலக பிரசித்திபெற்ற ஹாவாட் பல்கலைக்கழக மாணவி சோல் ஜோஜ் ஒரு வாரமாக இலங்கைக்கு விஜயம் செய்து தனது பல்கலைக்கழக ஆராய்ச்சிக்காக கற்கைக்காகா 'பொதுபலசேனாவும் இலங்கை முஸ்லீம்களும் என்ற 'தலைப்பில் தனது ஆராய்ச்சிக் கட்டுரையை ஹாவாட் பல்கலைக்கழக கற்கைக்கு சமர்ப்பிக்க உள்ளார். அதற்காக அவர் இலங்கையில் பல்வேறு முஸ்லீம் தலைவர்கள் சந்தித்து பொதுபல சேனாவின் செயற்பாடுகள் பற்றி கேட்டறிந்து கொண்டார். நேற்று அவர் கொழும்பு ரொஸ்மிட் பிளேசில் உள்ள அஸ்ரப் ஹூசைன், எம்.ஜ.எம் முகைடின், என்.எம் அமீன், ஆகியோரையும் சந்தித்தார். அத்துடன் அளுத்கம பேருவளை சம்பந்தமாக ஆங்கில மொழி முலம் எம்.ஜ.எம் மொஹிடின் வெயிட்ட நூல்களையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் அவர் இன்று அளுத்கம பேருவளை பகுதிக்கு விஜயம் செய்து கலவரம் இடம்பெற்ற இடங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களையும் நேர்காண்கின்றார்.  அத்துடன் அமைச்சர் வாசுதேவ நானயககாரவையும் சந்தித்தார். 



No comments

Powered by Blogger.