Header Ads



ஊவா மாகாண தேர்தல் - பிரச்சாரத்தை ஆரம்பித்தார் ரவூப் ஹக்கீம்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று 17 ஆம் திகதி ஊவா மாகாண தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு ஹல்துமுள்ள,ஹாலியல-தீன்புர,வெளிமடை ஆகிய இடங்களுக்குச் சென்றார்.அவருடன் கிழக்கு மாகாண சபை மு.கா.உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் பதுளை மாவட்டத்தில் துஆ கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் போட்‌டிஇடும் வேட்பாளர்கள் ஆகியோரும் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டனர்.முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு தேர்தலில் போட்டியிடுவது குறிப்பாக அரசாங்கத்துக்கும்,பொதுவாக இதர கட்சிகளுக்கும் அச்சத்தை உண்டாக்கிஇருப்பதாக அமைச்சர் ஹக்கீம் கூறினார்.நாளை 18 ஆம் திகதி திங்கள் கிழமையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  பதுளை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்.



No comments

Powered by Blogger.