இஸ்ரேலுடன் அரசாங்கத்துக்கு இருக்கின்ற நெருக்கமான தொடர்புகள் - அஸாத் சாலி
இலங்கையில் இன்னுமொரு பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தான் அனுசரணை வழங்கும் அமைப்புக்களைச் சேர்ந்த காடையர்கள் கும்பலை ஏவிவிட்டு இதுவரை ஏராளமான பள்ளிவாசல்களை தகர்த்துவிட்டது. இப்போது அதிலிருந்து மேலும் ஒரு படி முன்னேறி இராணுவமே நேரடியாக பள்ளிவாசல்களை தரை மட்டமாக்கும் நிலைக்கு இந்த நாடு வந்து விட்டது என்று தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக ஊடகங்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்iகின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்;டத்தில் உள்ள பழம்பெரும் பள்ளிவாசலான கருமலையூற்று ஜும்ஆ பள்ளிவாசல் நேற்று கொட்டும் மழையோடு மழையாக இராணுவத்தால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிவாசல் தற்போது இருந்த இடமே தெரியாமல் மண்ணோடு மண் ஆக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தப் பள்ளிவாசல் இலங்கையின் பழம்பெரும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும். இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்திய காலம் முதலே இந்தப் பள்ளிவாசல் இருந்து வந்துள்ளதாக இதன் வரலாறு தெரிந்த பிரதேச மக்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தப் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது பற்றி இராணுவத் தளபதியுடனும் பிரதேச கட்டளையிடும் அதிகாரியுடனும் தொடர்பு கொண்டு பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் முறையிட்டபோது இருவருமே சொல்லிக் கொடுத்தாற் போல் இங்கு ஒரு பள்ளிவாசலே இருக்கவில்லையே என்று பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகளை ஏளனம் செய்துள்ளனர்.
இந்தப் பள்ளிவாசல் மிகவும் பழமையானது என்பதால் காலத்துக்கு காலம் அது புனரமைக்கப்பட்டும் வந்;துள்ளது. அதற்கான சகல ஆதாரங்களும் பள்ளிவாசல் நிர்வாகத்திடமும் ஊர் பிரமுகர்களிடமும் உள்ளன. அதேபோல் இது இலங்கையின் மிகவும் பழமையான ஒரு பள்ளிவாசல் என்பதை நிரூபிப்பதற்;கான ஆதாரமும் மக்களிடம் உள்ளன. கிழக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் முன்னர் அமைச்சராக இருந்தபோது 2007ம் ஆண்டில் கூட இந்தப் பள்ளிவாசலின் புனரமைப்பு பணிகளுக்காக ஐந்து லட்சம் ரூபாவை அரச நிதியில் இருந்து வழங்கியுள்ளார். ஆனால் இன்று அவரிடமே இப்படி ஒரு பள்ளிவாசல் இருக்கவில்லை என்று இராணுவ தலைமைபீடம் கூறுகின்றது. முஸ்லிம்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும்,அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் எந்தளவுக்கு அலட்சியமாக இந்த அரசாங்கம் கையாளுகின்றது என்பதைத்தான் இது புலப்படுத்துகின்றது.
யுத்த நிலைமை சீரடைந்த பின்னரும் கூட இந்தப் பிரதேசத்தில் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த கூமார் 350 முஸ்லிம் மீனவ குடும்பங்களை அங்கு மீண்டும் குடியேற விடாமல் இராணுவமும் கடற்படையினரும் இணைந்து தடுத்து வந்துள்ளதோடு மக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தி வந்தும் உள்ளனர்.
வடக்கிலும் கிழக்கிலும் பொது மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் பணியை கச்சிதமாக மேற்கொண்டு வரும் இராணுவமும் கடற்படையும் தமது சூட்சுமத் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்தப் பிரதேசத்திலும் மக்களின் காணிகளை கையகப்படுத்தி சில வருடங்களாக இந்தப் பள்ளிவாசல் பக்கம் எவரையும் செல்லவிடாமல் தடுத்தும் வந்துள்ளனர். மிகவும் திட்டமிட்டு மக்கள் செல்லமுடியாத இடமாக இந்த இடத்தை மாற்றி கைவிடப்பட்ட ஒரு பள்ளிவாசலாக இதனை ஆக்கி நேற்று தமது சூட்சுமத்தின் இறுதிக்க கட்டத்தையும் அரங்கேற்றியுள்ளனர்.
இந்த அரசாங்கத்துக்கு இஸ்ரேலுடன் இருக்கின்ற நெருக்கமான தொடர்புகள், அவர்களின் திட்டமிடல் பிரகாரம் தான் இலங்கை இராணுவம் செயற்படுகின்றது என்பன போன்ற விடயங்கள் கருமலையூற்று பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதன் மூலம் மேலும் தெளிவாகியுள்ளது. முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக இலங்கை இராணுவமும் செயற்படத் தொடங்கியுள்ளமை மிகவும் ஆபத்தானதாகும். நாட்டில் ஏனைய இடங்களில் எஞ்சியுள்ள பள்ளிவாசல்களின் நிலையையும் இது கேள்விக்குறியாக்கியுள்ளது. இத்தகைய ஆபத்தான நிலையை இதற்கு முன்னர் இந்த நாட்டு முஸ்லிம்கள் ஒருபோதும் எதிர்நோக்கியதில்லை. இந்தப் பழம்பெரும் பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டதற்கான காரணத்தை அரசாங்கம் உடனடியாக விளக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் இந்தப் பிரதேச மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிராக அணி திரள வேண்டும் என் கேடடுக் கொள்கிறேன்.
.jpg)
Post a Comment