நைஜீரியாவில் மலாலா - கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க போகிறாராம்..!
பாகிஸ்தான் தலிபான்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த மலாலா யூசுப்சாய், போக்கோ ஹரம் வாதிகளால் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவிகளை மீட்டுத் தரும்படி அந்நாட்டின் அதிபரிடம் கோரிக்கை விடுப்பதற்காக நைஜீரியா நாட்டுக்கு சென்றுள்ளார்.
கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை நேற்று சந்தித்த மலாலா, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தலைநகர் அபுஜாவில் நடந்த இந்த சந்திப்பில் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோருக்கு அவர் ஆறுதல் சொன்ன போது, பல பெண்கள் துக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் வாய் விட்டு கதறி அழுதனர்.
இன்று (திங்கட்கிழமை) தனது 17-வது பிறந்த நாளை நைஜீரியாவில் கொண்டாடிய மலாலா, அந்நாட்டின் அதிபர் குட்லக் ஜொனாத்தன்-ஐ சந்தித்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவித்து தருமாறு கேட்டுக் கொண்டார்.
சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின் போது 3 மாதகாலமாக கடத்தல்காரர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாணவிகள் அனைவரும் எனது சகோதரிகள். கடத்தப்பட்ட எங்கள் பெண்களை மீட்டுத் தாருங்கள் என்பது தான் எனது இந்த பிறந்த நாள் விருப்பமாக இருக்கும் என நைஜீரியா அதிபரிடம் மலாலா தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த அதிபர் குட்லக் ஜொனாத்தன், ‘பலப் பிரயோகம் மூலம் மாணவிகளை மீட்க முயற்சிப்பது அவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும். அவர்களை பத்திரமாக மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. விரைவில் அவர்கள் வீடு திரும்புவார்கள்’ என்று தெரிவித்தார்.
கடத்தப்பட்ட மாணவிகளை தனது மகள்களாகவே கருதுவதாகவும், விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் நைஜீரியாவில் எங்கு சென்று படிக்க விரும்பினாலும் தேவையான கல்வி உதவித் தொகையை வழங்க தனது அரசு தயாராக உள்ளது என்றும் குட்லக் ஜொனாத்தன் உறுதியளித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மலாலா, மாணவிகள் அனைவரும் பத்திரமாக திரும்பி வரும் வரை அவர்களை மீட்பது தொடர்பான தனது பிரசாரம் ஓயாது என்று தெரிவித்தார்.
இதே நோக்கத்தை முன் வைத்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, ஹாலிவுட்டின் பிரபல கதாநாயகி ஏஞ்சலினா ஜோலி ஆகியோரும் உலக தலைவர்களின் ஆதரவை திரட்டி வருவது நினைவிருக்கலாம்.

இப்ப எல்லோருக்கும் விளங்கி இருக்கும் மலாலா ஒரு உண்மையான முஸ்லிம் பெண் அல்ல என்பது இவள் அமெரிக்காவால் தயாரிக்க பட்ட பெண். ஒரு மார்க்கம் உள்ள எந்தொரு பெண்ணும் இன்னொரு ஆணுடன் கை குலுக்க மாட்டாள்
ReplyDeleteA tool for America's propaganda.
ReplyDelete