காசா பற்றி எரிகிறது - 172 பேர் வபாத் 1,230 பேர் காயம்
காசா மீது இஸ்ரேல் ஏழாவது நாளாகவும் நேற்று திங்கட்கிழமை வான் தாக்குதல்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்களை தொடர்ந்தது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர இராஜதந்திர முயற்சிகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படையணியின் மூன்று பயிற்சி முகாம்கள் மீது நேற்றுக் காலை இஸ்ரேல் யுத்த விமானங்கள் குண்டு போட்டன. எனினும் இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மருத்துவ வட்டாரங்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தெற்கு காசாவின் தைர் அல் பலாஹ்வில் இருக்கும் கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. தவிர, தெற்கு நகரான ஜபலியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலரும் காயமடைந்துள்ளனர்.
இதில் காசாவில் இருந்து வடக்காக மிகத் தொலைவில் இருக்கும் இஸ்ரேல் நகரான பெயித் ல'pயா மீது போராளிகளால்; ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட் டுள்ளது. எனினும் இந்த தாக்குதலில் இருந்து தப்ப குடியிருப்பாளர்களை இஸ்ரேல் முன்கூட்டியே எச்சரித்திருந்தது.
இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளதோடு 1,230 பேர் காயமடைந்துள்ளனர். வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில் மோதலை முடிவுக்கு கொண்டுவர உலக சக்திகள் அவசர பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் தற்காலிக முகாம்களில் உயிரை பாதுகாத்துக் கொள்ள சுமார் 17,000 பேர் தஞ்சம் புகுந்திருப் பதாக ஐ.நா. நிவாரண அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்ப்பலி அதிகரித்து வரும் நிலையில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்று காசாவை மையமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைக்கான பலஸ்தீன மையம் குறிப்பிட்டுள் ளது. இதன்படி கொல்லப்பட்டவர்களில் 130க்கும் அதிக மானவர்கள் சிவிலியன்களாவர்.
அவர்களில் 35 சிறுவர்களும் 26 பெண்களும் அடங்குகின்றனர். தவிர இஸ்ரேல் காசாவில் இருக்கும் 147 வீடுகள் தரைமட்டமாக்கி இருப்பதோடு மேலும் பல கட்டிடங்கள் மோசமான சேதத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.
மறுபுறத்தில் கடந்த ஜ{லை 8 ஆம் திகதி மோதல் ஆரம்பமானது தொடக்கம் ஹமாஸ், இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
எனினும் இந்த தாக்குதல்களில் இதுவரை எந்த இஸ்ரேலியரும் கொல்லப்படவில்லை. இஸ்ரேல் மீது எறியப்பட்ட ரொக்கெட் குண்டுகளில் 160 ரொக்கெட்டுகள் இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு முறை மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன. இதனை இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு உறுதிசெய்துள்ளார்.
இந்த மோதலில் முதல் முறையாக சிரியாவில் இருந்தும் இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு கோலன் ஹைட் டின் வெறுமையான நிலைத்தில் சிரியாவின் ரொக்கெட் விழுந்துள்ளது. எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ரொக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக சிரியாவின் இராணுவ நிலைகள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
மறுபுறம் தெற்கு லெபனானில் இருந்து ஏவப்பட்ட நான்கு ரொக்கெட் டுகள் நேற்று வடக்கு இஸ்ரேலில் விழுந்துள்ளன. இதனை லெபனான் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இஸ்ரேல் தரப்பில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது. பதிலுக்கு இஸ்ரேல் பீரங்கி தாக்கு தல் நடத்தியுள்ளது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை இஸ்ரேல் இராணுவம் நீண்ட தூர ரொக்கெட் தளங்களை அழிக்க காசா மீது முதல் முறை தரைவழி தாக்குதலை நடத்தியது. வடக்கு காசாவில் இருந்து குடியிருப்பாளர்களை வெளியேறும்படி இஸ் ரேல் இராணுவம் அறிவுறுத்தியது.
இதில் கடந்த சனிக்கிழமையே பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அன்றைய தினம் இஸ்ரேல் தாக்குதல் களில் 56 பலஸ்தீனர் கொல்லப்பட் டனர். இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. காசா நாகரில் குறித்த குடும்பத்தினரின் வீட்டின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மேலும் எட்டுப் பேர் கொல்லப் பட்டதோடு நேற்று திங்கட்கிழமை அதிகாலை நடத்தப் பட்ட தாக்குதல்களில் இருவர் பலியாயினர்.
இதில் ஞாற்றுக்கிழமை இரவு இஸ்ரேல் யுத்த விமானங்கள் வீடுகள், கைவிடப்பட்ட இராணுவ தளங்கள் மற்றும் விவசாய நிலங்கள் மீது குண்டு போட்டன. இதில் 60க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.
காசாவின் டைர் அல் பலாஹ்வில் இருக்கும் அல் நூர் பள்ளிவாசல் இஸ்ரேல் வான் தாக்குதலில் சேதமடைந் தது. காசா நகரில் இருக்கும் அரச கட்டிடம் மீதும் ஞாயிறு இரவு குண்டு போடப்பட்டது.
காசாவின் பெத் அல் லஹ்யாவிலிருந்து பொது மக்களை வெளியேற எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்களை இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானத்தின் ஊடே போட்டிருந்தது. "சிவில் மக்களுக்கு பாதிப்பை எற்படுத் துவது எமது எதிர்பார்ப்பல்ல. ஆனால் ஹமாஸ் பகுதி மற்றும் அதன் தளங்களுக்கு அருகில் இருப்பது பாதுகாப்பு இல்லை என்பதை பொதுமக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்" என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை குறிப் பிட்டுள்ளது.
இந்நிலையில் இடம்பெயரும் மக்களுக்கான முகாம்களை 10,000 இல் இருந்து 20,000 வரை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. நிவாரண அமைப் பின் பேச்சாளர் கிறிஸ் கினஸ் குறிப்பட்டுள்ளார்.
மறுபுறத்தில் இரட்டை பிரஜh உரிமை பெற்றிருக்கும் சுமார் 800 காசா குடியிருப்பாளர்கள் காசாவில் இருந்து வெளியேறி இஸ்ரே லில் தஞ்மடைந்துள்ளனர்.
எனினும் காசா குடியிருப்பாளரான சவ்லா எல் திபி என்ற பெண், தமது வீட்டை விட்டு வெளியேறுவது அபாயகரமானது என்று குறிப்பிட்டுள்ளார். "வீதியில் நடப்பதும் இங்கு பாதுகாப்பு இல்லை. காசா அனைத்தும் தற்போது பற்றி எரிகிறது" என்று குறிப்பிட்டார்.
காசா குடியிருப்பாளர்களுக்கு மறைவதற்கு இட மில்லை என்று பிரிட்டனுக்கான பலஸ்தீன நிர்வாகத்தின் தூதுவர் மனுல் ஹஸ்ஸஸியன் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் விபரித்துள்ளார்.
"அங்கு முகம்களோ, பதுங்கு குழிகளோ இல்லை. தமது வீட்டைத் தவிர போவதற்கும் இடமில்லை" என்று கூறிய அவர், "அவர்கள் தமது வீட்டை விட்டு வெளியேறினால் வீதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாவார்கள்" என்றார். வடக்கு காசாவை ஒட்டி இருக்கும் தமது எல்லைப் பகுதியில் இஸ்ரேல் படைகளை குவித்து வைத்துள்ளது. இந்நிலையில் காசா மீது தரைவழி ஆக்கிரமிப்பு ஒன்றுக்கான வாய்ப்பும் அதிகரித்திருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இஸ்ரேலின் நடவடிக்கையை பிரதமர் பென் ஜமின் நெதன்யாகு நியாயப்படுத்தியுள்ளார். "தவறுதலாக சிவில் மக்கள் கொல்லப்பட்டதையிட்டு நாம் கவலை அடைகிறோம். ஆனால் சிவில் மக்கள் கொல்லப்பட்டதற்கு ஹமாஸ் முழுமையாக பொறுப்புக் கூற வேண்டும்" என்று அமெரிக்காவின் சி.பி.எஸ். தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் நெதன்யாகு கூறினார்.
மறுபுறத்தில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், வளர்ந்துவரும் சக்தியாக இருக்கும் ஹமாஸ் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தும் என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தற்போதைக்கு இந்த நடவடிக்கை முடியும் அறிகுறி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். "இந்த இராணுவ நடவடிக்கை எப்போது முடியும் என்று எமக்கு தெரியாது" என்று இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
நெதன்யாகுவுக்கு தொலைபேசி ஊடே அழைத்திருக்கும் அமெரிக்க இராஜhங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி, தற்போதைய பதற்றம் அதிகரித்திருப்பது குறித்து கவலை வெளியிட்டிருப்பதாகவும் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு மத்தியஸ்தம் வகிக்க உதவுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதல்களை நிறுத்த பிராந்திய தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாகவும் ஜோன் கெர்ரி இஸ்ரேல் பிரதமரிடம் உறுதி அளித்ததாக அமெரிக்க இராஜhங்க திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள் ளார்.
இதில் யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவர கட்டார், பலஸ்தீன நிர்வாகம், அமெரிக்க மற்றும் எகிப்து தரப்புகளில் இருந்து அழுத்தங்கள் வருவதாக இஸ்ரேல் அரச வட்டாரங்களை மேற்கோள் காட்டி இஸ்ரேல் இராணுவ வானொலி குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே காசா மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. இதில் பாரிஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மோதல் ஏற்பட்டது. ஆசிய நாடுகள் எங்கும் காசா மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. சிட்னி, ஹொங்கொங், டெல்லி மற்றும் ஜகார்த்தா நகரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 3000க்கும் அதிகமானவர்கள் ஒன்று திரண்டனர்.

Post a Comment