Header Ads



மெஸ்சி சிறந்த வீரர் இல்லை..!


உலக கோப்பை வெல்லத்தவறிய, ‘நாக் அவுட்’ போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காத மெஸ்சிக்கு, சிறந்த வீரர் விருது தரப்பட்டது, ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அவருக்கே அதிர்ச்சியாக இருந்திருக்கும்.  
    
அர்ஜென்டினா அணி 1986க்குப் பின் மீண்டும், உலக கோப்பை வெல்ல வாய்ப்பு வந்தது. லீக் சுற்றில் 4 கோல் அடித்து அசத்திய அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி, இதன் பின் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.       

லீக் சுற்று, காலிறுதி முடிந்த போது, வெளியான சிறந்த வீரர்களுக்கான ‘பிபா’ தரவரிசையில், ஒரு முறை கூட மெஸ்சி ‘டாப்–10’ பட்டியலில் இடம்பெறவில்லை. இதனிடையே, சிறந்த வீரர்கள் தேர்வில் கடைசியாக வெளியிடப்பட்ட பட்டியலில் மெஸ்சி இடம் பெற்றார். கடந்த 2006, 2010 அடுத்து, இம்முறை என, உலக கோப்பை வரலாற்றில், ‘நாக் அவுட்’ போட்டிகளில் மெஸ்சி, அர்ஜென்டினா அணிக்காக ஒரு கோல் கூட அடிக்கவில்லை.       

ஜெர்மனிக்கு எதிராக பைனலிலும் ஏமாற்றிய மெஸ்சிக்கு, கடைசியில் சிறந்த வீரருக்கான ‘கோல்டன் பால்’ விருது தரப்பட்டது, உலக ரசிகர்களுக்கு மட்டுமன்றி, அவருக்கே அதிர்ச்சியாக இருந்திருக்கும்.       

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘டுவிட்டரில்’ வெளியான செய்திகள்:      

* ‘தலைவர் செப் பிளாட்டர் (‘பிபா’) இருக்கும் வரையில், மற்ற வீரர்களுக்கு தகுதி இருந்தாலும், மெஸ்சிக்குத் தான் விருதுகள் கிடைக்கும்.      

* ‘அரையிறுதி, பைனல் என, கடந்த இரு போட்டிகளிலும், களத்தில் மெஸ்சி, பெரும்பாலான நேரங்களில் நடந்து கொண்டு தான் இருந்தார். இவருக்கு யார் ஓட்டளித்தது என்றே தெரியவில்லை’.      

* மெஸ்சி ‘கோல்டன் பால்’ விருதுக்கு தகுதியானவர் கிடையாது.’      

* ‘மெஸ்சிக்கு விருது தந்தது, ‘பிபா’வின் முட்டாள் தனமான முடிவு. இதனால், அவருக்கே வெட்கமாக இருந்திருக்கும்னா’.      

* ‘இவருக்கு விருது என்பது மிகப்பெரிய ‘ஜோக்’ தான்’.      

* ‘முல்லர், ரோட்ரிக்ஸ், ராபென் இருக்க, மெஸ்சிக்கு விருதா, என்ன ஒரு நகைச்சுவையான முடிவு’.

No comments

Powered by Blogger.