அமெரிக்கருக்கு ஏற்பட்டுள்ள விபரீத ஆசை..!
அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்த ஜெரிமையா ஹீட்டன் சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றிருந்தார். அங்கு எகிப்திற்கும், சூடானுக்கும் இடையில் இருந்த பிர் டவில் என்ற சிறிய மலைப்பகுதியின் மீது அவர் ஏறியுள்ளார். அப்போதுதான் அந்த நிலப்பரப்பு எந்த நாட்டையும் சேர்ந்தது அல்ல என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தன்னுடைய பிள்ளைகள் வடிவமைத்த கொடி ஒன்றினை அங்கு நட்ட ஹீட்டன், அந்த இடத்திற்கு வட சூடான் ராஜ்ஜியம் என்று பெயரிட்டார். இதன்மூலம் தனது 7 வயது மகள் எமிலி அந்த இடத்திற்கு இளவரசியாக இருப்பாள் என்று பத்திரிகை ஒன்றிற்கு ஹீட்டன் பேட்டி அளித்தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி குறித்து ரிச்மன்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் பிரிவின் பேராசிரியராகப் பணியாற்றும் ஷிலியா கரபிகோ கூறுகையில், அண்டை நாடுகளின் சட்ட அங்கீகாரம் இல்லாமல் ஹீட்டன் அந்தப் பகுதியின் மீது அரசியல் உரிமை கொண்டாடமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, ஐ.நா மற்றும் பிற குழுக்கள் இதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
எகிப்தும், சூடானும் இதற்கான அனுமதியை தனக்கு அளிக்கும் என்ற நம்பிக்கையை ஹீட்டன் வெளிப்படுத்தியுள்ளார்.

If they allow you will reside there and capture the other parts also... as the Israelis did in the past
ReplyDelete