Header Ads



எதிரிகளுடனான எமது போர் தொடரும் - கஸ்ஸாம் படையணி


காசாவுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர எகிப்து முன்வைத்திருக்கும் யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் இது குறித்து ஹமாஸ் அமைப்பு தனது சந்தேகத்தை வெளியிட்டுள்ளது. 

காசா மீது இஸ்ரேல் கடந்த ஒரு வாரமாக நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளது. 

ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படையணி இந்த பரிந்துரையை நிராகரிப் பதாக தனது இணையத்தளத்தில் அறிவித்துள்ளது. எவ்வா றாயினும் ஹமாஸ் அரசியல் பிரிவு தமது வழியில் செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டிருக்கும் யுத்த நிறுத்த முயற்சி குறித்து உத்தியோகபு+ர்வமாகவோ உத்தியோகபு+ர்வமற்ற முறை யிலோ எந்த தரப்பினாலும் அறிவுறுத்தப்படவில்லை என்று கஸ்ஸாம் படையணி நேற்று குறிப்பிட்டிருந்தது. 

ஊடகங்களில் வெளியாகி இருக்கும் பரிந்துரையின் விபரங்களை பார்க்கும்போது அது சிரம்பணிந்து சரண டைவதற்கு சமனானது என்று விமர்சித்திருக்கும் கஸ்ஸாம் படையணி, இந்த பரிந்துரை எழுதப்பட்ட மையின் அளவுகூட பெறுமதி அற்றது என்று குறிப்பிட்டுள்ளது. 

~~எதிரிகளுடனான எமது போர் தொடரும். அது மேலும் தீவிரப்படுத்தப்படும்" என்று கஸ்ஸாம் படையணி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

இஸ்லாமிய ஜpஹாத் ஆயுதக் குழுவின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான காலித் அல் பட்ச், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவந்து பலஸ்தீன மக்களை பாதுகாக்கும் எகிப்தின் பணி மற்றும் முயற்சியை வரவேற்பதாகவும் ஆனால் எந்த நிபந்தனையும் இல்லாத யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதாகவும் குறிப் பிட்டுள்ளார். 

~~நிபந்தனைகள் இன்றி யுத்த நிறுத்தம் ஒன்றை கடைப்பிடிப்பது ஏற்க முடியாதது. இதனை நாம் கடந்தகாலங் களிலும் அனுபவித்திருக்கிறோம். அது தோல்வியிலேயே முடிந்திருக்கிறது" என்று அல் பட்ச் குற்றம்சாட்டினார்.

~~காசா மீதான முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் எல்லை வாயில்கள் திறக்கப்படுவதை பிரதானமாகக் கொண்டு பலஸ்தீன மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்குவதே தற்போதைய தேவையாகும். அவ்வாறு நிகழ்ந்தால் அந்த நிமிடமே யுத்த நிறுத்தத்திற்கு இணங்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் குறித்த காலத்தில் மீண்டும் இவ்வாறே நிகழும்" என்றும் அவர் கூறினார். 

அல் அக்ஸா தொலைக்காட்சி ஊடே ஹமாஸ் அரசியல் பிரிவு துணைத் தலைவர் இஸ்மைல் ஹனியான் வெளியிட்ட அறிவிப்பில், குறித்த யுத்த நிறுத்தம் தொடர்பில் தமது குழு அணுகப்பட்டதாக குறிப்பிட்டார். எனினும் எந்த தரப்பு தம்மை அணுகியது என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.

ஹனியான் குறிப்பிடும்போது, "எமது மக்கள் யுத்தத்தை தவிர்க்கிறார்கள். ஆனால் சியோனிஸ எதிரிகள் ஆரம்பித்தார்கள். அவர்கள் தான் அதனை அறிவிததார்கள், அதற்கு தயாரானார்கள். அவர்கள்தான் பெண்கள், குழந்தைகள், குடும்பங்களை கொன்றனர். வீடுகளை அழித்தனர். முழுக் குடும்பங்களையும் இல்லாமல் செய்தனர்.

"ஒவ்வொரு இரத்தத் துளியும் எமது அன்புக்குரியது. எனது இதயமும் அனைத்து மக்களும் இந்த குடும்பங்களுடன் இருப்பார்கள். ஆனால் இரத்த ஆறு எமது உரிமையை வெல்லவும் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவரவும் காசா மற்றும் மேற்குக் கரையின் இந்த நிலையை முடிவுக்கு கொண்டு வரவும் மேலும் தூண்டுகிறது" என்று குறிப்பிட்டார். ஆனால் இஸ்ரேல், பலஸ்தீன நிர்வாகம் மற்றும் அனைத்து பலஸ்தீன தரப்புகளுடனும் ஆலோசித்த பின்னரே இந்த யுத்த நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக எகிப்து வட் டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

தற்போதைய நிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க இராஜhங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு வரவிருப்பதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. எகிப்தின் யுத்த நிறுத்த முயற்சியை வரவேற்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். 

எகிப்தின் யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேற்றுக் காலை தொடக்கம் காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை என்று குறிப்பிட் டுள்ளது. ஆனால் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்த பின் காசாவில் இருந்து 20 க்கும் அதிகமான ரொக்கெட்டுகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குறிப் பிட்டுள்ளது. 

எவ்வாறாயினும் இஸ்ரேல் யுத்த நிறுத்தத்தை ஏற்பதற்கு சற்று முன்னர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அது தெற்கு காசாவின் கான் யு+னிஸ் பகுதி மீது நடத்திய வான் தாக்குதல்களில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 

இதன்மூலம் இஸ்ரேல் தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 192 ஆக உயர்ந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் முக்கால் பங்கினர் அப்பாவி பொதுமக்கள் என்று ஐ.நா. கணித்துள்ளது. 

தாக்குதல்களில் 1,400 பலஸ்தீனர்கள் காயமடைந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

எனினும் இந்த பலி எண்ணிக்கையை நிராகரிக்கும் இஸ்ரேல், இது ஹமாஸை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட எண்ணிக்கை என்று குறிப்பிட்டுள்ளது. 

மோதல் ஆரம்பமானது தொடக்கம் காசாவில் இருந்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பில் எந்த உயிர்ப்பலியும் நிகழவில்லை. குறைந்தது நான்கு இஸ்ரேலியர் படுகாயம் அடைந்துள்ளனர். 

கடந்த திங்கட்கிழமை இரவு தெற்கு இஸ்ரேல் நகரான எய்லட்டில் குறைந்தது மூன்று ரொக்கெட் குண்டுகள் வெடித்துள்ளன. இவை எகிப்தின் சினாய் பகுதியில் இருந்து ஏவப்பட்டிருப்பதாக செய்திகள் குறிப் பிடுகின்றன. 

மறுபுறத்தில் இஸ்ரேல் நேற்று சிரியாவின் கட்டுப் பாட்டில் இருக்கும் கோலன் ஹைட்ஸ் பகுதி மீது வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் இரு பாதுகாப்பு வீரர்கள் மற்றும் இரு பெண்கள் கொல்லப்பட்டிருப்பதாக சிரிய மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

இதில் இராணுவ தளத்தின் மீதே இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக இஸ்ரேல் மீது சிரியாவில் இருந்து ரொக் கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் எகிப்தின் யுத்த நிறுத்தத்தை ஹமாஸ் ஏற்காவிட்டால் தமது இராணுவ நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நேற்று எச்சரித்திருந்தார்.

No comments

Powered by Blogger.