கட்டாருக்கு தாக்குதல் ஹெலிகொப்டர்கள் + பெட்ரோயிட் ஏவுகணைகளை வழங்குகிறது அமெரிக்கா
கட்டாருக்கு 11 பில்லியன் டொலர் பெறுமதியான யுத்த ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்கா அபச்சே தாக்குதல் ஹெலிகொப்டர்கள், பெட்ரோயிட் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு முறையை கட்டாருக்கு வழங்கவுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சக் ஹேகல் மற்றும் கட்டார் பாதுகாப்பு அமைச்சர் ஹமத் பின் அலி அல் அட்டியாவுக்கு இடையில் பென்டகனில் கைச்சாத்தானது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்கா இந்த ஆண்டில் மேற்கொண்ட மிகப்பெரிய ஆயுத விற்பனையாக குறிப்பிடப்பட் டுள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பரில் கட்டார் சென்ற ஹேகல் அந்நாட் டுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒத்து ழைப்பு உடன்படிக்கையில் கைச் சாத்திட்டிருந்தார். இதன்மூலம் அமெரிக்க துருப்புகள் பிராந்தியத்தில் தனது செயற்பாட்டை தொடர்ந்த முன்னெடுக்க வாய்ப்பு ஏற்பட்டது.

Post a Comment