Header Ads



ஊவா மாகாணசபைத் தேர்தலில் பொது சின்னத்தின் போட்டியிட தயார் - முஸ்லிம் காங்கிரஸ்

ஊவா மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவான ஓர் சின்னத்தின் கீழ் முஸ்லிம் கட்சிகளை அணி திரட்டி போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முயற்சி வெற்றியளிக்காவிட்டால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஊவா மாகாணத்தில் 47000 முஸ்லிம் வாக்காளர்கள் இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலளார் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவது உறுப்பினர்களை தெரிவதில் சிக்கலை ஏற்படுத்தும்.

தனித் தனியாக முஸ்லிம் கட்சிகள் போட்டியிட்டால் ஒரு உறுப்பினரையேனும் தெரிவு செய்ய முடியாது.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவான ஓர் சின்னத்தின் கீழ் போட்டியிட விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தயார். அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் கூட்டணி சேருமாறு இதுவரையில் ஆளும் கட்சி அழைப்பு எதனையும் விடுக்கவில்லை. ஊவா மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமென உயர்பீடம் வலியுறுத்தி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நீங்களும் ரிஷாடும் இன்று அலறி மாளிகை இப்தாரில் போய் ....சால்வையின் ஒடுக்கில் உட்கார்ந்து கொண்டு ......நாங்கள் யூ என் பீ ஓட்டை பிரிக்கிறோம்....நீங்கள் வெற்றிபெற வாழ்த்து கிறோம் என்று .. ..சொல்லப்போவதும் கூட எங்களுக்கு தெரியுமே.....

    ReplyDelete
  2. THANITHTHU KETTU PADU THOLVI ADAYAMAL ONTRU PATTU KETKKA WENDUM INNUM MUSLIMKALAI PIN THALLUM WELAIKALAI SAIYAMAL ALLAHWUKKA ONRU PATTU ORU POTHUWANA SINNATHTHI KELUNKAL ATHUTHAN NAMMUDAYA WETRI PLEASE ONTRU PADUNKAL ATHIKALA MUSLIMKALUKKA WITTUKKODUTHTHU ONTRUNKAL

    ReplyDelete

Powered by Blogger.