Header Ads



இலங்கை சூடானாக மாற்றமடைவதனை தடுக்க முடியாது - ஞானசாரர்


பொதுபல சேனா இயக்கமும் தாமும் அரசியல் ஈடுபடுவதாக அதன் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி அரசியலில் தாம் ஈடுபடவில்லை எனவும், தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவா தெரிவித்துள்ளார். பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசியல் செய்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி அரசியலில் ஈடுபடும் திட்டங்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் விமலஜோதி தேரருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அழுத்தகம சம்பவங்கள் தொடர்பில் பிழையான தகவல்களை வெளியிட்டதாகவும் அவர் கட்சியின் தலைமைப் பதவியை ராஜினாமா செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில கடும்போக்கவாதிகள் தங்களது அரசியலுக்காக சில சம்பவங்களை பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் தலைவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காணப்படாவிட்டால் இலங்கை சூடானாக மாற்றமடைவதனை தடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலுத்கம சம்பவம் தொடர்பிலான மெய்யான தகவல்கள் மூடிமறைக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் வாழ்ந்து வரும் சிங்கள பௌத்தாகள் தமது அமைப்புக்கு நிதி உதவி வழங்கி வருவதாகவும் வெளிநாட்டு தூதரகங்களோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ நிதி உதவிகளை வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலுத்கம காவல் நிலைய உத்தியோகத்தர்கள் மீது முஸ்லிம் மக்கள் அழுத்தங்களை பிரயோகித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா இயக்கம் ஓர் கடு;ம்போக்குவாத இயக்கமல்ல எனவும், அதனை மக்கள் அறிவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. அதுதான் எங்களுக்கு அப்போவே தெரியுமே

    ReplyDelete
  2. BBS ORU KADUMPOKKUWATHA IYAKKAM ILLAI AANAL ATHU ORU PASISA PAYANKARAWAATHA IYAKKAM GNANASARA ORU INTERNATIONAL CRIMINAL ,TERRIST .GOVERNTMANT NOW NOT STOP BBS SRILANKEN NEXT GANARETION MEET VERY VERY PROBLAME GOV...BEE CAREFULL THIS BBS.

    ReplyDelete

Powered by Blogger.