முஸ்லிம்களுக்கு ஆயுதங்களைத் தாருங்கள் - பாராளுமன்றத்தில் சீறிப்பாய்ந்த ஹுனைஸ் பாரூக் எம்.பி.
முஸ்லிம்களுக்கு ஆயுதங்களை தாருங்கள் நாங்களே எங்களை பாதுகாத்துக் கொள்வோம். என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்ரதணி ஹுனைஸ் பாரூக் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது குறுப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அழுத்கம சம்பவம் தொடர்பிலான விடயம் முன்வைக்கப் பட்டபோது இடையில் குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் 'தர்ஹா டவுன், அழுத்கம, பேருவளை, பிரதேசத்தில் இடம்பெற்ற மண் கொள்ளைச் சம்பவங்கள், வீடுகளை எரித்தமை, கடைகளை எரித்தமை, மனிதப் படுகொலை, போன்றன ஆயுதம் தாங்கிய அரச படைகள் பார்த்துக் கொண்டிருக்கும் போது இடம்பெற்றிருக்கின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
1980-1990ம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் கிராமங்களைப் பாதுகாக்க இனவெறியாட்டத்தை கட்டுப்படுத்த சட்டபூர்வ ஆயுதம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது. இதன்போது முஸ்லிம்கள் தங்களது கிராமங்களைப் பாதுகாத்தனர். இன்று இதைவிட மோசமான நிலை தென்னிலங்கையில் உருவாகியுள்ளது.
அரச படைகளால் அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்க முடியாவிட்டால் எமக்கு ஃமுஸ்லிம்களுக்கு சட்டபூர்வ ஆயுதங்களைத் தாருங்கள் நாங்கள் எமது கிராமங்களையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் இன வெறியாட்டக் காரர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்கின்றோம் என்ற வேண்டுகோளைவிடுத்தார்.
றிப்கான் கே சமான்.

if govt give arms to muslims...they will wipe out entire tamil population in srilanka.....history told us it thru eastern tamil's experiences
ReplyDeleteMahendran Gowrishankar
ReplyDelete????
Mahendran Gowrishankar..
ReplyDeletecould you give a bit more words about the experience of eastern tamilians . you mean to say that muslims wipe out tamilians in esastern. i did't get your point exactly.
Mahendran . ohh why your bring new history ... also no comment Gowrishankar
ReplyDelete