Header Ads



சம்மாந்துறை பிரதேச சபையில் கண்டன பிரேரனை நிறைவேற்றம்

(யு.எல்.எம்.றியாஸ்)

சம்மாந்துறை பிரதேச சபையின் 39வது சபை அமர்வு, சபையின் தவிசாளர் அல் - ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் தலைமையில் நடைபெற்ற போது பேருவள,தர்கா நகர் வன்முறை சம்மந்தமாக சபையில் கண்டன பிரேரனை ஒன்று நிறைவேற்றப்பட்டது.

மதத்தின் பாதுகாப்பினை வைத்துக் கொண்டு, இன வன்முறைகளையும், கலவரங்களையும் ஏற்படுத்துவதை சம்மாந்துறை பிரதேச சபை வன்மையாக
கண்டிக்கிரது.

அதே வேளை சாதி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பால் இன வன்முறைகளையும் கலவரங்களையும் தூண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகுபாடற்ற முறையில் நிவாரணம் வழங்கப்படல் வேண்டும் எனவும் சபையினால் ஏகமனதாக தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது என சம்மாந்துறை பிரதேச சபை கௌரவ தவிசாளர் அல் - ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.