Header Ads



முஸ்லிம்களுக்கு ஆபத்துக்கள் கண்னெதிரில் வந்து நின்ற போது...!


(நஜீப் பின் கபூர்)

முஸ்லிம்களுக்கு ஆபத்துக்கள் கண்னெதிரில் வந்து நின்ற போது அது பற்றி ஜனாதிபதியைச் சந்திக்க சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்ள வக்கில்லாதவர்களாக நமது அரசியல் தலைவர்கள் இன்று வரை இருந்தார்கள் என்பது நமது சமூகம் அறிந்த விடயம். ஆனால் பிரச்சினைகள் பற்றிப்பேச நாம் பெரியவரிடத்தில் அனுமதி பெற்றிருக்கின்றோம். இன்று சந்திப்போம் நாளை சந்திப்போம் என்று ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு விளம்பரங்களைக் கொடுத்து, காணல் நீரை நோக்கி இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தை இவர்கள் வழி நடாத்திச் செல்ல இவர்கள் முனைகின்றார்கள் என்பது தெளிவு.

இப்போது இழப்புக்கள் தொடர்பாக அனைத்துப் புனர் நிர்மானங்களையும் அரசு செய்து தரும் என்று ஜனாதிபதி (18.06.2014) பேசி இருக்கின்றார். இந்தப் பேச்சின் நம்பகத் தன்மை விடயத்தில் நிறையவே முஸ்லிம் சமூகத்திற்கு சந்தேகங்கள் இருக்கின்றது. இதற்கான பணம் அரச பணமா? அல்லது அரபுலகப் பணமா? அப்படி  பணம் எங்கிருந்து வந்தாலும் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தளவு சென்றடையும். சுனாமிக்கு வந்த பணம் கடலையே காணாத மக்களுக்குப் - பிரதேசங்களுக்குச் சென்ற கதைபோல் இந்தக் கதையும் நடந்து விடுமோ என்று கேட்கத்தோன்றுகின்றது.

கட்டிடங்களை மட்டும் அமைத்துக் கொடுத்துவிட்டு இழந்த கோடிக் கணக்கான உடமைகளுக்கு நஸ்டஈட்டை யார் பெறுப்பேற்பது. பாதிக்கப் பட்டவர்களுக்கான மறுவாழ்வுக்கான வழிவகைகள் திட்டங்கள் என்ன? இழப்புக்கள் பற்றிய புனர் நிர்மானங்கள் எவ்வாறு அமையப்போகின்றது? இந்த அறிவிப்புக்கள் தொடர்பான நடைமுறைச் சாத்தியங்கள் எந்தளவிற்கு உறுதியானது என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க..!

முஸ்லிம்களின் அவலங்கள் மீது குளிர் காய்கின்ற நமது அரசியல்வாதிகளின் அறிப்புக்கள் தொடர்பாக சில வார்த்தைகள் பேச வேண்டி இருக்கின்றது. 

கட்டம் ஒன்று:

நேற்று வரை இதற்கு நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் நாம் ஒரு தீர்மானத்திற்கு வருவோம். பதவி துறப்போம் என்று பேசிய மு.கா. தலைவர் இன்று கூட்டடிய பத்திரிகையாளர் மாநாட்டில் நான் பதவி துறப்பதால் இன்னும் முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்துக்கள்தான் அதிகம் என்று சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் சுருதியை மாற்றி பேசத் துவங்கி விட்டார்.

கட்டம் இரண்டு:

இன்று கிழக்கு மாகாண சபையில் இந்த சம்பவங்களுக்கு எதிரான கண்டனப் பிரேரணையை முன்வைப்பது நீயா? நானா? என்ற அற்பமான சண்டையை துவங்கி அதற்கான சந்தர்ப்பத்தை பறி கொடுத்திருக்கின்றார்கள் அங்குள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் இது பற்றிய தகவல் இப்படி இருக்கின்றது.

இன்று கிழக்கு மாகாண சபை கூடியபோது தேசிய காங்கிரஸ் ஆரிப் சம்சுதீனும் மு.கா. ஜெமிலும் இந்த பிரேரணையை முன்வைப்பது நீயா நானா என்ற சண்டையைத் துவங்கி சபை நடவடிக்கைகளை குழப்பி சந்தர்ப்பத்தை பறிகொடுத்திருக்கின்றார்கள். இவர்கள் சண்டையில் செங்கோல் எடுத்துச் செல்லப்பட்டதால் கூட்டத்தை சபை முதல்வர் ஆரியவதி கலப்பத்தி இன்று ஒத்திவைத்து சபையிலிருந்து வெளியேறி இருக்கின்றார். 

கட்டம் மூன்று:

இன்று கல்முனையில் இந்த வன்முறைக்கு எதிரான ஹர்த்தல் அனுஸ்டிக்கப்பட்ட போது கல்முனை மா நகரசபை இன்று செயலாற்றி ஹர்த்தாலுக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகின்றது. கல்முனை மாநகர் மு.கா. ஆதிக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே நெருப்பில் எறிகின்ற முஸ்லிம் சமூகத்தின் பெயரில் அரசியல் இலாபங்களையும் பட்சோந்தித் தனங்களையும் பண்ணுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த நாடகங்க முஸ்லிம் சமூகத்திற்கு நல்ல உதாரணங்களாக இருக்கின்றது. 

நடக்கக் கூடாதது நடந்து விட்டது. சம்பவத்திற்காக பொது பல சேனாவை ஆரம்பித்த கிரம விமலஜோதி தேரரே தனது தலைமைப் பதவியைத் துறக்கின்றேன் என்று சொல்லி இருக்கின்றார். என்பது கவணிக்கத்தக்கது! 

No comments

Powered by Blogger.