Header Ads



சர்வதேச முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் (WAMY ) இலங்கை கிளைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அஸ் ஷேய்க் நஜ்மான் ஸாஹித் (நலீமி) அவர்கள் சர்வதேச முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் (WAMY ) யின் இலங்கை கிளைக்கான புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அலுவலம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

சவூதி அரேபியா ரியாதில் உள்ள சர்வதேச முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் (WAMY ) யின் தலைமை அலுவலகம் ஒப்புதல் வழங்கியதன் பின், இலங்கை கிளைக்குப் பொறுப்பான தமாமில் உள்ள அதன் கிழக்கு பிராந்திய அலுவலகமே மேற்படி நியமனத்தை வழங்கியுள்ளது.

அஸ் ஷேய்க் நஜ்மான் ஸாஹித் (நலீமி) சர்வதேச முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் (WAMY ) யின் இலங்கை கிளையின் 17 ஆண்டுகால வரலாற்றில் நான்காவது பணிப்பாளர் என்பதோடு கொழும்பில் உள்ள கட்டார் நாட்டு தூதரகத்தின் முன்னாள் வெளிவிவகார அதிகாரி என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

A.J.M. மக்தூம் 

No comments

Powered by Blogger.