11வது உலக சமாதானப் பயனத்தின்..!
(ஏ.எஸ்.எம்.ஜாவித்- மாநாட்டு மண்டபத்திலிருந்து)
11வது உலக சமாதானப் பயனத்தின் 2014இன் இளைஞர்களுக்கான மனித உரிமைகள் மாநாட்டை முன்னிட்டு தெற்காசியாவின் இளைஞர் மற்றும் மனித உரிமைகள் உச்சி மாநாடு மேற்படி அமைப்பின் இலங்கைக்கான இணைத் தலைவரும் இளைஞர் பாராளுமன்றத்தின் செனட் சபை உறுப்பினருமான அசான் பெரேரா தலைமையில் சர்வதேச இளைஞர் மனித உரிமைகள் அமைப்பின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் புறூஸ் பேர்குஷனின் வழி நடத்தலில் இன்று (25) கொழும்பு மஹிந்த ராஜபக்ஷ தாமரைத்தடாக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றன.
27ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வரையான மூன்று நாட்களுக்கு இம்மாநாடு நடைபெறுகின்றது. இன்று ஆரம்பமான நிகழ்வின் மாலை நிகழ்வு கொழும்பு விளையாட்டு அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதுடன் ஏனைய நிகழ்வகளும் இம்மாநாட்டு மண்டபத்திலேயே நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 100 பேரைக் கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் இருநூறுக்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி மாநாட்டில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாறல்களுடன் இறுதி நாள் நிகழ்வில் அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதுடன் மேற்படி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மிகவும் ஆர்வத்துடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கருத்துக்களைப் பரிமாறியதை காணக் கூடியதாக இருந்தது.




Post a Comment