Header Ads



பேஸ்புக் விவகாரம் - குருநாகல் மாவட்ட பாடசாலைக்கு விடுமுறை


பேஸ்புக் சம்பவத்துடன் தொடர்புடைய குருணாகலை சர் ஜோன் கொத்தலாவலை வித்தியாலயத்திற்கு முன்பாக 04-04-2014 காலை முதல் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கை நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பாடசாலையின் முன்னாள் அதிபர் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டமை மற்றும் பாடசாலையின் தற்போதைய நிலைமை நெருக்கடியாகவுள்ளமை என்பவற்றை சுட்டிக்காட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், குருணாகலை – தம்புள்ளை பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் போராட்டம் நடத்தப்பட்ட தருணத்தில் காவல்துறையின் கிளர்ச்சி தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பாடசாலை வளாகத்தில் கடும் பாதுகாப்பை வழங்கியிருந்தனர்.

இந்தநிலையில், சர் ஜோன் கொத்தலாவல மகாவித்தியாலயத்தின் அதிபர் சமன் இந்திர ரத்தின இந்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர, சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படும் விடுமுறை குருணாகல் சர் ஜோன் கொத்தலாவல வித்தியாலயத்திற்கு மாத்திரம் நாளை முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.