Header Ads



நாடு ஜெனீவாவில் எதிர்நோக்கிய ஆபத்தை, அரசாங்கம் தேர்தல் வியாபாரமாக்கியது - கரு

மாகாண சபைத் தேர்தல் வெற்றிகளால் அரசாங்கத்திற்கு எதிரான சர்வதேச கருத்துக்களை மாற்றிவிட முடியாது. இங்கு நடைபெறும் தேர்தல்களை உலக நாடுகள் பொருட்படுத்துவதில்லை நாடு ஜெனீவாவில் எதிர்நோக்கிய ஆபத்தை அரசாங்கம் வியாபாரமாக்கி தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள தேர்தலை நடத்தியது என்றும் ஐ.தே.க.வின் தலைமைத்துவ சபையின் தலைவரும் எம்.பி.யுமான கருஜெயசூரிய குற்றம் சுமத்தினார். 

பிட்டகோட்டே ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கரு ஜயசூரிய மேலும் கூறியதாவது, 

17ஆவது திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட்டு தேர்தல்கள் அரச சேவைகள் நீதிச்சேவைகள் உட்பட அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் 18 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி ஜனாதிபதி  தன்வசப்படுத்திக் கொண்டார். 

இவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே தென், மேல் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஜனாதிபதியே தேர்தல் சட்டங்களை மீறினார் அமைச்சர்கள் அதிகாரிகளும் அதனையே பின்பற்றினார்கள்.  அரச ஊடகங்கள் வளங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறானதோர் சூழ்நிலையிலும் அரசாங்கத்திற்கு மக்கள் சிகப்பு சமிக்ஞையை காட்டியுள்ளனர். தெற்கிலும் மேல் மாகாணத்திலும் வாக்கு வீதம் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மக்கள் தேர்தல்களில் நம்பிக்கை இழந்துவிட்டனர். பெரும்பாலான மக்கள் தொகையினர் வாக்களிக்கவில்லை. Vi

No comments

Powered by Blogger.