காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் ஐந்து மாணவிகள் 9 ஏ சித்தி
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் ஐந்து மாணவிகள் 9 ஏ சித்தி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.சி.ஏ.சத்தார் தெரிவித்தார்.
இதில் முஹம்மட் ஜிப்ரி பாத்திமா ரிஸ்மா,முஹம்மட் ஜௌபர் பாத்திமா ஜெஸா,நூர் முஹம்மட் பாத்திமா ஸப்னா,சேகு முஹைதீன் பாத்திமா நுஹா,முஹம்மட் பஷீர் ரிஸா பத்வின் என்ற ஜந்து மாணவிகளுமே 9 ஏ சித்தி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.சி.ஏ.சத்தார் மேலும் தெரிவித்தார்.

Post a Comment