இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் ஆர்வம் காட்டவில்லை - பிரித்தானியா
சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் தமது நாடு ஆர்வம் காட்டவில்லை என்று சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின் தெரிவித்துள்ளார்.
“இங்கு முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதே ஐ.நாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்களின் எதிர்பார்ப்பு. இப்போது தடைகள் விதிப்பது ஒரு பிரச்சினையல்ல.
தடைகளை விதிப்பதற்கான அதிகாரத்தையோ ஆணையையோ ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கொண்டிருக்கவில்லை. எனக்குத் தெரிந்தவரை, எந்தவொரு நாட்டின் அரசாங்கமும் சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை இதுவரை முன்மொழியவில்லை.
ஐ.நா மனிதஉரிமை விவகாரம் மற்றும் மனிதஉரிமைகள் தீர்மானம் என்பன எமது கொள்கையின் ஒரு நோக்கமல்ல. நாங்கள் சிறிலங்காவின் முதல் ஐந்து முதலீட்டாளர்களில் ஒருவர்.
நாம் 100இற்கும் அதிகமான நிறுவனங்களை இங்கு வெற்றிகரமாக செயற்படுத்தி வருகிறோம். எனது பணியின் முக்கியமான பங்கு, இந்த வர்த்தக முதலீட்டு உறவுகளை ஊக்குவிப்பதாகும்.
பொருளாதாரத் தடை இந்த பொருளாதார உறவுகளைச் சீர்குலைத்து விடக் கூடும் என்பதால் பிரித்தானியா அதில் ஆர்வம் காட்டவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment