Header Ads



முஜீபுர் ரஹ்மானுக்கு ஒரு திறந்த மடல்..!

(கே.சி.எம்.அஸ்ஹர்)

 மேல் மாகாண சபை உறுப்பினர்
 முஜிபுர் ரஹ்மான்
 அவர்களுக்கு ஓர் திறந்த மடல்

 அஸ்ஸலாமு அலைக்கும்!

                   இன்று எமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதக் குழுவினரால் திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றை மேலோட்டமாக பார்க்கும் போது பர்மாவில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலைமை போன்று எமக்கும் ஏற்பட்டு விடுமோ எனக் கவலை அடைவதைக் காணமுடிகிறது .புராதன காலம் தொட்டு சிங்கள் முஸ்லிம் உறவு பலமாக அடித்தளம் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது.

பள்ளி வாயல் பிரச்சினை ,மத்ரஷா பிரச்சினை ,ஹலால் பிரச்சினை ,ஹிஜாப்,பர்தா பிரச்சினை, வர்த்தகம் பற்றிய பொய்ப்பிரச்சாரம் ,வில்பத்துக் காணிப்பிரச்சினை ,என்று தினம் தினம் புதிய புதிய சவால்களை எதிர் கொண்டு வருகிறோம்.இவ்வாறான பிரச்சினைகள் எழும் போது அதனை தடுப்பதற்குப் பாடுபட வேண்டிய தார்மீகப் பொறுப்பு முஸ்லிம் அரசியல் வாதிகள் ,உலமா சபையினர் உலமாக்கள் ,முஸ்லிம் இயக்கங்கள் போன்றோரின் மேலே சுமத்தப்பட்டுள்ளன.இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிம் கட்சியும் வௌ;வேறு வகையான வழிமுறைகளைக் கையான்டு செயற்படுகின்றன. இறுதி இலக்கு சமாதான சகவாழ்வே ஆகும். அமைச்சர்களான எம்.எச்.எம்.பௌசி,றிசாத் பதியுதீன்,றஊப் ஹக்கீம் போன்றோர் பலமாக பாடுபட்டு வருகின்றனர். இவர்களை அரசை விட்டு வெளிNயுற வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். இதனால் எதைச் சாதிக்கப்போகிறோம்.இதனால் அரசு விழுமா? அரசின் பலம் புரியும் தானே.

நீங்கள் அண்மையில் அறிக்கை மூலம் அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை இராஜமாச் செய்ய வேண்டுமென கோரிக்கை விட்டு இருக்கிறீர்கள்.வடபுலத்தில் இருந்து பல வந்தமாக வெளியேற்றப்பட்ட எம்மக்களின் பிரதிநிதியே அவர் அமைச்சுப் பொறுப்பும் இம்மக்களுக்காக இறைவனால் கொடுக்கப்பட்ட அருட்கொடையே ஆகும்.அவர் இராஜிமாச் செய்வதை எம்மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

வடக்கில் அழிக்கப்பட்ட பள்ளி வாயல்கள் மீளக் கட்டப்பட்டதற்கும், அங்கு பாங்கொலி ஒலிப்பதற்கும் ,தொழுகை நடைபெறவும் ,மீளக்குடியேறவும்,மஹிந்த அரசினதும்,அமைச்சர் றிசாத் பதியுதீனனதும் நெருங்கிய உறவே காரணமாகும்.மீளக்குடியேற்றத்தின் போது முஸ்லிம்களை விழுங்க முயலும் இனவாத முதலைகளுடன் போராடியே றிசாத் பதியுதீன் வடபுல முஸ்லிம்களின் இயல்பு வாழ்க்கையை மீளப்பெற்றுக் கொடுக்கிறார்.

வடபுல முஸ்லிம்கள் பலவங்தமாக வெளியேற்றப்பட்ட போது ஆட்சியில் இருந்தோர் யார்? அவர்கள் என்ன செய்தனர்.23 வருட அகதிவாழ்வுக்கு அடித்தளமிட்டோர்.யார் என்பது அனைவருக்கும் தெரியும் நீங்கள் எத்தன? தடவை வடபுல முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகாலப்பிரச்சினையைப் பார்வையிடச் சென்றுள்ளீர்கள் .உங்களின் அரசியல் சிந்தனை கொழும்பைச் சுற்றி மட்டுமே உள்ளது.ஆனால் அமைச்சர் றிசாத் பதியுதீனின் சிந்தனை வடக்கை மட்டும் கொண்டதல்ல முழு இலங்கையும் மையப்படுத்தியது.அதனால்தான் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எனப்படுகிறது. அண்மையில் ஐ.தே.க.பா.உ .ரங்கே பண்டார அவர்கள் மறிச்சுக்கட்டி குடியேற்றத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்.இக்கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தா? கட்சியின் கருத்தா? என்பதை தெளிவு படுத்துவீர்கள்?       

2 comments:

  1. Very reasonable points.I HIGHLY APPRECIATE. We have to stop blaming each other. We unitedly work against our common enemy. Br.Rishard is the only one fight against Grandpass Masjid. No one can easily forget that.

    ReplyDelete
  2. Br. Mujibur Rahman! keep in your mind that though Rizad and Athaullah are with the Governmente they are working for the community, it is visible, Rishad is taking challenging task to settle those displaced people. We have to appreciate that

    We have to focus on SLMC deception, the main actor Rauf and his few associates who are delivering only lip service, trade off the community and misrepresenting Islam for their well being

    Let us think wisely.

    ReplyDelete

Powered by Blogger.