கல்முனைக் குளக்கட்டு வீதியை அபிவிருத்தி செய்யுங்கள் - உதுமாலெப்பையிடம் கோரிக்கை
(எம்.எம்.ஏ.ஸமட்)
கல்முனைக் குளக்கட்டு வீதியை அபிவிருத்தி செய்யுமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (படங்கள் இணைப்பு)
இது குறித்து பிரதேச மக்கள் தெரிவித்ததாவது,
மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை நகர் மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களை இணைக்கும் குளக்கட்டு வீதி தசாப்தங்கள் பல கடந்தும் அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ளது.
குறித்த பிரதேசங்களுக்கிடைப்பட்ட கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்துச் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால் அடிக்கடி வீதி விபத்துக்கள் இப்பிரதேசங்களில இடம்பெறுகின்றன.
வாகன அதிகரிப்பின் காரணமாக, கல்முனைப் பிரதான வீதியை பிரதேசங்களுக்கிடையிலான போக்குவரத்திற்காக அச்சத்துடனேயே பாதசாரிகளும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக பிரதான வீதிக்குச் சமமான மாற்று வீதி ஒன்றின் அவசியம் இப்பிரதேச மக்களுக்கு அவசியமாகவுள்ளது. இதன் நிமித்தம் இக்குளக்கட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வீதியில் காணப்படும் மதகுக்கு பாலமிடப்பட்டு இவ்வீதி அபிவிருத்தி செய்யப்படுமாயின,; ; பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயற்காணிகளில் வேளாம்மைச் செய்யும் விவசாயிகளும், சாய்ந்தமருது வொலிவோரியன் சுனாமி வீட்டுத்திட்டத்திலுள்ள சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தோரும் கல்முனைக்குடி கிறீன் பீல்ட் சுனாமி மீள் குடியத்திட்டத்தில் வசிக்கும் 300 குடும்பங்களைந் சேர்ந்தோரும் பெறும் நன்மையடைவா.;
கல்முனை நகருக்குச் செல்வதற்கும் கல்முனை நகரிலிருந்து மாவடிபள்ளி மற்றும் சம்மாந்துறைப் பிரதேசத்திற்குச் செல்வதற்கும் அச்சமின்றி இவ்வீதியை அவர்கள் பயன்படுத்துவர்;.
அத்தோடு இவ்வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றவேளை இவ்வீதியோடு இணைந்ததாக உடல் நல ஓடு பாதையும் அமைக்கப்பட வேண்டும் உடல் நல ஓடு பாதை நிறுவப்படுவதன் மூலம்; உடற்பயிற்சி இன்றி ஏற்படும் தொற்ற நோய்களையும் இப்பிரதேசத்தில குறைக்க முடியுமெனச் சுட்டிக்காட்டும் பிரதேச மக்கள் இக்குளக்கட்டு வீதியை அபிவிருத்தி செய்து தருமாறு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரிடம் கோருகின்றனர்.
அத்துடன், இவ்வளவு காலமும் மக்கள் பிரதிநிதிகளின் அபிவிருத்திப் பார்வையில் அகப்படாத இக்குளக்கட்டு வீதியினை அபிவிருத்தி செய்து அதற்கு இப்பிரதேசத்தின் விவசாயத்திற்கும் அபிவிருத்திக்கும் ஏணியாக இருந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் பெயரைச் சூட்டுமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment