Header Ads



அல்-முனீறா பெண்கள் உயர்தரப்பாடசாலை மாணவியின் வரலாற்றுச் சாதனை


(கே.சி.எம்.அஸ்ஹர்)

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலயத்திற்கு உட்பட்ட அல்-முனீறா பெண்கள் உயர்தரப்பாடசாலையைச் சேர்ந்த அப்துல் கபூர் அஸ்கா என்ற மாணவி  கா.பொ.த. சாதாரண பரீட்சையில் 09 பாடங்களிலும் ஏ சித்தியையும் பெற்றுள்ளார். மேலும் சாஜஹான் சஹாமா என்பவர் 8ஏ,1பியும் பெற்றுள்ளார். மேலும் நான்கு மாணவிகள் 7ஏ பெற்றுள்ளனர். 

பாடசாலை வராலாற்றில் ஒரு பெரும் சாதனை பொறிக்கப்பட்டுள்ளது. 1938ல் கலவன் பாடசாலையாகச் செயற்பட்டு வந்த இப்பாடசாலை 1941ல் பெண்கள் பாடசாலையாக மாற்றப்பட்டு. பின்னர் இப்படசாலையின் பெயர் அல்-முனீறா பெண்கள் உயர் தரப்பாடசாலை என மாற்றப்பட்டது. 1சி பாடசாலையாகச் செயற்பட்ட இதன் தரம் 1ஏபி தரம் கொண்ட உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகள் உள்ள பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. 

தரம்-05,கா.பொ.த.(உயர்தர),கா.பொ.த(சாதரன) என்பவற்றில் சிறந்த பெறுபேறுகள் கிடைப்பதற்கு பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துஸ்ஸலாம் அவர்களின் அர்ப்பண சிந்தனையும் ,ஆசிரியர்களின் ஒன்றிணைந்த சேவையும் காரணமாக அமைந்துள்ளது.

விஷேடமாக இம்முறை வெளியான சாதாரன தரப்பரீட்சை பெறுபேறுகள் சிறப்பாக அமைய ,வலயத்ததலைவர் எம்.எ.எ. ஹப்பார் அவர்களின் மேற்பார்வையில் நடாத்தப்பட்ட மேலதிக பின்னேர வகுப்புக்களும் துணைபுரிந்து உள்ளன.இதனையிட்டு பாடசாலை சமூகம் மகிழ்ச்சியடைகிறது.
   

1 comment:

  1. Masha Allah very good. Congratulations children. Appreciate the effort of Principal and others. May Allah bless you all.

    ReplyDelete

Powered by Blogger.