Header Ads



ஞானசார தேரரின் பிரச்சினை பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்டது - முன்னிலை சோசலிச கட்சி

பௌத்த விகாரைகள் என்பது காவி உடை அணிந்த வியாபாரிகள் இருக்கும் இடம் என முன்னிலை கட்சி உறுப்பினர் தீப்தி குமார குணரட்ன தெரிவித்தார்.
கொழும்பு பொது நூலகத்தில் நேற்று நடைபெற்ற மே தின பச்சோந்திகளும் சிகப்பு நிறமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சந்த ருவான் சேனாதீர போன்ற ஊடகவியலாளர்கள் ஞானசார தேரரை கோத்தபாய ராஜபக்ஷ அல்லது மகிந்த ராஜபக்சவின் பிரச்சினை என காண்கின்றனர். ஆனால் ஞானசார என்பவர் தொடர்பான பிரச்சினை பொருளாதார முறை சம்பந்தப்பட்டது.

ஞானசார தேரர்  போன்றே ஏனையவர்களும் முதலாளித்துவத்தின் பிரச்சினை.

நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் போன்றவர்களின் பணத்தை அனுபவிப்பது அவர்களின் ஊழியர்கள். இதனால் இலங்கை தொழிலாளர்கள் யார், முதலாளிகள் யார் என்பது சரியான கண்டுப்பிடிக்க முடியவில்லை.

வலதுசாரிகள் யார், இடதுசாரிகள் யார் என இலங்கையில் உள்ளவர்களுக்கு புரியவில்லை. அந்த காலத்தில் இடதுசாரிகளையும் வலதுசாரிகளையும் பிரித்தறிய முடியும். ஆனால் தற்போது இடதுசாரிகள் யார், வலதுசாரிகள் யார் என்பதை பிரித்தறிய முடியாதுள்ளது எனவும் தீப்தி குமார குணரட்ன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.