Header Ads



பிரபாகரனுக்கு நேர்ந்த கதிதான் ரவூப் ஹக்கீமுக்கும் - மேர்வின் சில்வாவின் எச்சரிக்கை


(சிமால் அஹ்மட்)

கடந்த சில நாட்களாக அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் விதத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.   

அவை தொடர்பில், அமைச்சர் மேர்வின் சில்வா களனிப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அமைச்சர் ஹக்கீமுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கூறியதாவது, 

'நான் அமைச்சர் ஹக்கீமுக்கு கூறுகிறேன், அரசாங்கத்தை கொண்டு செல்ல 113 ஆசனங்கள் தான் தேவை. இப்பொழுது 160க்கு மேற்பட்டவர்கள் எங்களோடு இருக்கிறார்கள். அவருடன் சிலர் இருக்கலாம். ஜனாதிபதியின் வார்த்தைகளில் கூறுவதானால், கதவு திறந்திருக்கிறது வெளியேறிச் செல்லுங்கள். ஆனால், நாட்டுக்கு துரோகியாகி விடாதீர்கள். அவ்வாறானால் உங்களுக்கும் பிரபாகரனுக்கு நேர்ந்த அதே கதிதான். 

கூடுதலாகப் பேசி ஜாதி, மத பேதத்தை ஏற்படுத்தாமல், தயவு செய்து வாயை அடக்கிக்கொண்டு அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிப்பது தான் உகந்ததென எனது நண்பருக்கு கூறிக்கொள்கிறேன்'.

இதனை, அமைச்சர் ஹக்கீமின் கருத்துக்களோடு சம்பந்தப்படுத்தி, புதன்கிழமை (12) நண்பகல் தனியார் தொலைக்காட்சிகள் இரண்டு ஒளிபரப்புச் செய்தன. 

8 comments:

  1. சமாளிப்பாரா 'நம்ம தலைவர்' அல்லது இது ஒரு 'தேர்தல் கால அரசியல் தந்திரமா.........?' புரியாத புதிராக உள்ளது....???

    ReplyDelete
  2. UNAKKU EPPADIYANA MRANAM ENDRU PAR NEE SUDU KATRUKK SALLY KATTI IRUKKIRAI ANAL UNAKKU SUDU KADU KIDAIKKATHU

    ReplyDelete
  3. இதென்ன மலையே சரிந்தாலும் எம் தலைவன் அசையமாட்டான் கடைசியில் தலைவர் மட்டும்தான் மிஞ்சுவாரு போலிருக்கு மற்றய எல்லாரும் பஸில் ராஜபக்ஸவின் கையில் உள்ளனர்

    ReplyDelete
  4. Mervin silvavukku Urin kudittu kudittu putti malingi ponatu ellarukum theriyum thane.

    ReplyDelete
  5. தட்டுவதுக்கு மேளம் இருந்தால் எப்படியும் தட்டலாம்

    ReplyDelete
  6. Mr: Mervin Silva:
    Did Mr. Hakim encourage violence?? Did he commit any criminal activity?? -- What are you talking about??
    Mr. Hakim:
    Are you going to be an yes man still?? The prize of being a nice guy??
    Politicians must be intelligent, possessing strong leadership for the good of humanity. The SL politicians are wonderful human beings.

    ReplyDelete
  7. அட கோமாளியே... பிரபாகரன் ஆயுதம் தூக்கியதால் உங்கள் முன் சட்ட விரோதியானார்,,, நாமும் அந்த வழியில் சென்றிருப்போம் இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கா விட்டால். எம்மை உம்மிடம் இருந்து காத்த இந்த கட்சியை பிரபாகரன் வழியில் திசை திருப்ப நீ அல்ல உன் சால்வ மாமா நினைத்தாலும் முடியாது. உரிமையை கேட்டு பேசுவதால் பிரபாகரன் கதி என்றால், எம் உரிமையை மறுத்து பேசும் சிங்கள இன வாதிகளுக்கு என்ன கதி நேர வேண்டும்..???? யோசித்தாயா..உனக்கும் இருக்கிடி ஆப்பு,, நவநீதம் பிள்ளையை திருமணம் முடித்து கேட்டாயல்லவா ??
    சில வினாடிகள் முன்னால் · விருப்பம்

    ReplyDelete
  8. பழைய கதை sir

    ReplyDelete

Powered by Blogger.