Header Ads



ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகியது

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பான தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஐக்கிய தேசிய கட்சி இன்று 12-03-2014  வெளியிட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்ரமசிங்க மற்றும் தலைமைத்துவ சபையின் தலைவர் கருஜெயசூரிய ஆகியோர் இதனை வெளியிட்டு வைத்தனர்.

புரட்சிக்கு பச்சைக் கொடி என்ற பெயரில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தும் முதற்கட்ட நவடிக்கை இதுவென்று தெரிவித்தார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்தவார இறுதியில் வெளியிடும் என்று கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.