யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி அமைப்பின் யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி அமைப்பின் விளக்கம்
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்!
JMRO என்ற அமைப்பு , இடம்பெயர்ந்த யாழ் முஸ்லிம்கள் சார்பாக தெகிவளையில் தனது முதலாவது கூட்டத்தை ஆகஸ்ட் 2013 இல் நடாத்தியது. தொடர்ந்து பம்பலப்பிட்டி எலைட் ஹோட்டலில் (Elite Hotel)) தனது இரண்டாவது கூட்டத்தை நடாத்தியது.
அக்கூட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களினது வரலாறு, கல்வி, வியாபாரம், மருத்துவம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்களிப்புச் செய்தோர், சாதனை புரிந்தோர் போன்ற விபரங்களை பகுப்பாய்வு
செய்து நூல் வடிவில் வெளியிடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பலமுறை அங்கத்தவர்கள், ஆலோசகர்கள் அனைவரும் ஒன்றுகூடி அச்செயற்பாட்டிற்காக முழுமூச்சுடன் ஈடுபட்டனர். அங்கத்தவர்களினாலும் ஆலோசகர்களினாலும் தரவு திரட்டும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன. மேலும் பெரியோர்கள் , கல்விமான்கள், வைத்தியர்கள், உலமாக்கள் உள்ளிட்ட பெருந்தகைகள் பற்றிய தகவல்கள் நேர்காணல்கள்மூலம் எமது அமைப்பினால் பெறப்பட்;டன. இம்முயற்சி பெரும் வெற்றியளித்தது.
நூல் அச்சுப்பதிவேற்றும் வேலை அப்போதிருந்த செயலாளர் எம்.எஸ்.எம்.ஜான்சின் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கான தினமும் 02.03.2014 எனத் தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன் தெகிவளை ஜயசிங்க மண்டபமும் இதற்காக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
ஆனால் .எம்.எஸ்.எம்.ஜான்சினினால் (முன்னாள் செயலாளர்) தவறான ஆதாரமற்ற மற்றும் மிகைப்படுத்தப்பட்ட பல தகவல்கள் உட்புகுத்தப்பட்டதுடன் மலர்க்குழுவினால் திருத்தம் செய்யப்பட்ட, சீராக்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படாது பழைய விடயங்கள் மீண்டும் உள்வாங்கப்பட்டு அச்சுப்பதிவேற்றம் அவரினால் செய்யப்படுகிறது என அறியமுடிகிறது.
இச்செயற்பாட்டிற்கு எமது அமைப்பு எவ்விதத்திலும் பொறுப்பில்லை என்பதை அமைப்பின் சார்பாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். விளம்பரங்கள் நூலில் உள்வாங்கப்படுவதில்லை, விளம்பரங்களுக்கு என யாரிடமும் பணம் திரட்டுவது இல்லை, நூலிற்கான முழுச் செலவினத்தையும் எமது அமைப்பின் நிதி ஆலோசகர்களிடம் அவர்கள் முன்வந்ததற்கு இணங்க அவர்களிடம் பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், வேறு பெயரில் விளம்பரம் மூலம் நிதி திரட்டப்படுவதில் அவர் ஈடுபடுகின்றார் என்ற தகவல்கள் எமக்குக் கிடைத்தவண்ணம் உள்ளன.
இதற்கிணங்க அவரிடம் எழுத்துமூலம் 07.02.2014 இல் விளக்கம் கோரியும் பதில் அளிக்காததன் காரணத்தினால் எமது அமைப்பினால் பம்பலப்பிட்டி எலைட் ஹோட்டலில் 22.02.2014 இல் கூடிய கூட்டத்தில் அவரை JMRO வின் சகல பொறுப்புக்களிலிருந்தும் நீக்குவதாக ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்நூல் உருவாக்கமானது பலரது அயராத உழைப்பினால் மேற்கொள்ளப் பட்டது. இதற்கு மாறாக அவரது கணனியில் உள்ள பதிவுகள், அச்சேற்றக் கொடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு தன்னிச்சையாக நூல் வெளியிடவும் வேறு அமைப்பின் பெயரில் விளம்பரம் திரட்டவும் முற்படுவதாக எமது அமைப்புக்கு அறிய வருகிறது.
எனவே தவறான அவரது முயற்சியில் சிந்தித்து அவதானமாக செயற்படுமாறு வர்த்தகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் பணிவுடன் வேண்டுகிறோம். மேலும் யாழ் முஸ்லிம்களின் வரலாறு, கல்வி, வியாபாரம், மருத்துவம், விளையாட்டு உள்ளடங்கலான விரிவான ஆக்கங்களை உள்ளடக்கிய நூல் JMRO ஆகிய எமது அமைப்பினால் எவ்வித நிதி அறவீடுகளோ, விளம்பர அனுசரணைகளோ இன்றி இலவசமாக வெகு விரைவில் வெளியிட எண்ணியுள்ளோம் என்பதையும் இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
நன்றி
வஸ்ஸலாம்
யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி அமைப்பு (JMRO)
General Secretary- M.A.M.Zabrin Committee Members - A.H.Amjad, A.C.Azeem, M.M.Jameel, A

Post a Comment