Header Ads



பொதுபல சேனாவையும், ரவானா பலயயையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும் - ரவூப் ஹக்கீம்


பொதுபல சேனா மற்றும் ரவானா பலய போன்ற கடும்போக்குடைய சக்திகளை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டுமென நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குறித்த கடும்போக்குடைய அமைப்புக்கள் வரம்பு மீறிச் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான கடும்போக்குடைய அமைப்புக்களை பாதுகாப்பதற்கு எந்த தரப்பினரும் முயற்சி எடுக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஓர் ஜனநாயகக் கட்சி எனவும், மக்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில அரசாங்க ஆதரவு தரப்பினர் கடும்போக்குடைய சக்திகளுக்கு ஆதரவளித்து வருவதாகவும், இந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நாட்டின் சகல தரப்பினரையும் பாதுகாக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச சமூகத்தினதோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களினதோ கைப்பொம்மையாக செயற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் நாட்டின் சகல இன, மத மக்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. எமது தலைவர் 'லேட் ஆக வந்தாலும்...... லேட்டஸ்ட்டாக வருகிறார்....'

    ReplyDelete
  2. Dear Brother,

    A True Muslim will be STRAIGHT forward in his intention, speech and in action.

    IF you talk like this way to collect the Muslim Votes and TAKE it Government.. Allah is enough to JUDGE on you.
    IF your intention is not to collect the vote and to support those who keep blind eye on the attackers of Muslims ... We Ask Allah to reward. you.

    We do not know your intention...(only Allah knows)... BUT we listen your speech and watch your action very carefully.

    Muhammed

    ReplyDelete

Powered by Blogger.