Header Ads



மெட்டியகனே விபத்தில் 4 பேர் பலி, தெற்கு அதிவேக விபத்தில் 7 பேர் காயம்

நாரம்மல – நீர்கொழும்பு வீதியில் மெட்டியகனே பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்யில் சென்ற நான்வரே சம்பவத்தில் பலியானார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கர வண்டியும் இலங்கை போக்குவரத்து அதிகார சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

அரச பேரூந்து நாரம்மலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் முச்சக்கர வண்டி கிரிஉல்லயில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

2

இதனிடையே, தெற்கு அதிவேக வீதியில் ஹொரண மற்றும் பண்டாரகமவுக்கு இடையிலான 35வது மைல்கல் அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிறு குழுந்தை உள்ளிட்ட ஏழு பேர் காயமடைந்த நிலையில் எல்பிட்டி மற்றும் நாகொட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாரவூர்தியின் பின்னால் வேன் ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிந்தி கிடைத்த தகவலின் படி சம்பவத்தில் 2 அரைவயதாக பெண் குழந்தை பலியானதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.