பள்ளிவாசல்களை தாக்குவதற்கான கற்களை முஸ்லிம்கள் எடுத்துக் கொடுக்கிறார்களா..? அஸாத் சாலி
அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பு இன்று (12.03.14) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மைக் காலங்களில் தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் அந்தக் கட்சி அரசியல் வங்குரோத்து நிலைக்கு சென்றுவிட்டது என்பதை நன்கு புலப்படுத்துகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாபதி பதவிக்குப் போட்டியிடலாம் அல்லது அவர் மரணிக்கும் வரை அந்தப் பதவியில் இருக்கலாம் என்பதற்கு வழிவகுக்கும் அரசியல் யாப்பின் 18வது திருத்தம் நிறைவேற ஆதரவளித்தவர்தான் ரவூப் ஹக்கீம். இன்று அவர் ஜனாதிபதி மூன்றாவது தடவை போட்டியிட்டால் அவர் வெற்றிபெற தனது கட்சி முழு ஆதரவை வழங்கத் தயார் என்று பிரகடனம் செய்துள்ளார். ஆனால் கொழும்பில் தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் பிரச்சினை உள்ளது என்றும், ஜனாதிபதியுடன் சண்டையிட்டே தான் காரியங்களைப் புரிந்து வருவதாகவும் கூறி கொழும்பு முஸ்லிம்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடபட்டுள்ளார். ஆனால் இந்த சண்டைகள் குறித்து அவரின் கட்சி செயலாளர் கூறும் போது இது கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் குடும்பப் பிரச்சினை போன்றது என்று கூறுகின்றார். அப்படியானால் நாம் தொடர்ந்தும் கேற்கும் கேள்விதான் யார் கணவன் யார் மனைவி என்பது. இதை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல்லது செயலாளர் தான் மக்களுக்கு விளக்க வேண்டும். அவர்களின் கூற்றுக்களில் இருந்து ஒரு விடயம் மட்டும் நன்கு தெளிவாகின்றது.
ஜாதிக ஹெல உறுமயவை போலவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இன்று வங்குரோத்து நிலைக்கு வந்து விட்டது. அவர்களிடம் இப்போது வாக்கு வங்கியும் இல்லை. அவர்களுக்கு செல்வதற்கு வேறு இடமும் இல்லை. ரவூப் ஹக்கீமை இனி உள்வாங்குவதில்லை என்று ஐ.தே.க. தீர்க்கமாக முடிவு செய்து விட்டது. அதனால் தான் அரசில் இருந்து வெளியேறலாம் என்று ஜனாதிபதி சமிக்ஞை கொடுத்தும் கூட நான் போக மாட்டேன். நீங்களே அனுப்பி வையுங்கள் என்று ஹக்கீம் கூறுகின்றார். இதற்கு முக்கிய காரணம் ஒருவேளை அரசிலிருந்து வெளியேற ஹக்கீம் முடிவு செய்தால் அவருடன் கட்சி செயலாளர் மட்டும் தான் எஞ்சியிருப்பார். முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஏனையவர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டு அரசுக்குள் தஞ்சம் புகுந்து விடுவர்.
அதற்கான கொடுக்கல் வாங்கல்கள் யாவும் எற்கனவே நடந்து முடிந்துள்ளன.ஹக்கீமின் கட்சிக்கு வாக்கு பலம் இல்லை என்பது கடந்த மத்திய மாகாண சபை தேர்தலின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் அவரின் கட்சி சார்பாக போட்யிட்ட எவரும் வெற்றிபெறவில்லை. கிடைத்த ஒரேயொரு ஆசனம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக ஏற்கனவே உறுப்பினராக இருந்தவரின் தனிப்பட்ட வாக்கு பலத்தால் கிடைத்ததாகும் இந்த அரசுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனவே இனிமேல் அந்தக் கட்சியில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அந்த வேட்பாளர் தனது தனிப்பட்ட வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் கடைசி நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து போட்டியிட்டு தனது வாக்குகளைக் காப்பாற்றிக் கொண்டார். மாறாக அது முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்த வெற்றியல்ல. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இந்தக் கட்சியின் நிலை இதுதான். முஸ்லிம் காங்கிரஸுக்கு இருக்கின்ற கொஞ்சம் நஞ்சம் வாக்குகளை கூட தகர்க்கும் வகையில் தான் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் சூழ்ச்சியின் விளைவாக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் ஒரு அணியை களம் இறக்கியுள்ளார். இதனால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இம்முறை மேல் மாகாண சபையில் இழக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் தான் நாம் ஒரு விடயத்தை மீண்டும் அழுத்திக் கூற விரும்பகின்றோம். நடக்கப்போகும் மாகாண சபைத் தேர்தலில் எப்படி முஸ்லிம்கள் இந்த அரசுக்கு வாக்களிக்கக் கூடாதோ அதே போல் இந்த அரசுடன் இணைந்துள்ள அமைச்சர்களின் கட்சிகளுக்கும் முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாது. அவ்வாறு அவர்கள் வாக்களிப்பது ஒரு ஹராமான (தவிர்க்கப்பட்ட) செயலை செய்வதற்கு சமமாகும். முஸ்லிம்கள் இந்த அரசுக்கோ அல்லது அது சார்ந்த கட்சிக்கோ வாக்களிப்பது எஞ்சியுள்ள பள்ளிவாசல்களை தாக்குவதற்கான கற்களை முஸ்லிம்களே எடுத்துக் கொடுப்பதற்கு சமமானதாகும்.
இன்று இந்த நாடு நோயாளிகளின் தேசம் ஆகிவிட்டது. சுகாதார அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம் கடந்த ஆண்டில் 115 மில்லியன் தடவைகள் மக்கள் பல்வேறு சிகிச்சைகளுக்காக அரச ஆஸ்பத்திரிகளுக்கும் ஏனைய சிகிச்சை நிலையங்களுக்கும் சென்று வந்துள்ளனர். நாட்டின் சனத்தொகை சுமார் 20 மில்லியன். இந்த சனத்தொகை 115 மில்லியன் தடவைகள் ஆஸ்பத்திரிகளுக்கு சென்றுள்ளனர் என்றால், அரச கணிப்பீட்டின் படி ஒருவர் சுமார் ஆறு தடவைகள் ஆஸ்பத்திரிகளுக்கு சென்றுள்ளார்.இந்தத் தொகை அதற்கு முந்திய ஆண்டிலும் பார்க்க ஐந்து மில்லியன்களால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இது நாட்டு மக்கள் அனைவரும் நோயாளிகளாக மாறி வருகின்றனர் என்பதைத் தான் காட்டுகின்றது. அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை அன்றாடம் கேள்விபட்டே மக்கள் பாதி நோயாளிகளாகி விடுகின்றனர். ஆஸ்பத்திரிகளுக்கு சென்றால் போதிய மருந்துகள் இல்லை. மருந்துக் கொள்வனவிலும் விநியோகத்திலும் அன்றாடம் மோசடிகள் இடம் பெறுகின்றன. ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வகை மருந்துகள் தேவைப்பட்டால் அதில் ஒரு வகைதான் அரச ஆஸ்பத்திரிகளில் கொடுக்கப்படுகின்றது. மற்றவற்றை வெளியே வாங்கும் படி கூறப்படுகின்றது. வெளியில் எக்ஸ்றே எடுக்கும் படி கூறப்படுகின்றது. தேவையான மருத்துவ பரிசோதனைகளுக்கும் மக்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கே அனுப்பப்படுகின்றார்கள். ஆனால் மக்களிடம் அவறறுக்;கு தேவையான பணம் இல்லை. பிறகு எப்படி மக்களின் நோய்கள் குணமடையும்? அரசாங்கம் இவ்வாறு தான் இன்று இந்த நாட்டு மக்களை கொன்று வருகின்றது. இலவச கல்வி என்று சொல்லப்படுகின்றது. எங்கே இலவச கல்வி உள்ளது? இலவச சுகாதார சேவை என்று சொல்லுகின்றார்கள், அது எங்கே உள்ளது?
இரத்தினபுரியில் பல கொலைகள் மற்றும் கொள்ளைகளுக்காக தேடப்பட்டு வந்த ஒரு பாதாள உலக நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். வழமைபோலவே பொலிஸார் அவர் தம்மை தாக்க முயன்றபோது தாங்கள் அவரை தாக்கியதால் அவர் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். இவ்வாறு கொல்லப்படுகின்றவர்களை பொலிஸார் அழைத்துச் செல்லுகின்ற போது அவர்களிடம் எப்படி ஆயுதங்கள் முந்திக் கொண்டு வருகின்றன என்பதுதான் தெளிவில்லாமல் இருக்கின்றது. எந்த நாளும் இதே கதைதான். இவ்வளவு காலமும் இந்த நபர் எங்கிருந்தார்? யார் இவருக்கு ஆதரவளித்தார்கள்? எந்த அரசியல்வாதியின் பின்னால் அல்லது எந்த அமைச்சரின் பின்னால் இவர் மறைந்திருந்தார்? இவருக்கு புகலிடம் அளிக்கப்பட்டிருந்ததா? அப்படியானால் அவர்கள் யார்? இவரால் கொலை செய்யப்பட்டவர்கள் யார் யார்? இவரால் நடத்தப்பட்ட கொள்ளைகள் எவை? இவற்றை எல்லாம் பொலிஸாரால் மக்களுக்கு தெளிவு படுத்த முடியுமா? ஒருவரைக் கைது செய்து அவர் மீது எல்லா குற்றங்களையும் போட்டு அவர் கதையை முடித்து விடுவது கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் தீர்வாகாது. குற்றவாளிகளின் பின்னால் இருக்கின்ற கதைகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும.; பொலிஸார் மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும்.
நாட்டில் கொள்ளைகளும் அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் மக்களால் உழைத்து மூன்று வேளையும் உண்ண முடியாத ஒரு பரிதாபகரமான நிலை ஏற்பட்டுள்ளது. ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது ஏர் லங்கா நிறுவனத்தில் இடம்பெறும் மோசடி அதன் தலைவரின் கல்வித் தகைமை அந்த நிறுவனத்தில் ஏற்படும் நட்டங்களுக்கு காரணம் என்ன போன்ற விடயங்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். நான் இந்த விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தமைக்காக அவரைப் பாராட்டுகிறேன.; இது உண்மையில் ஐ.தே.க போன்ற ஒரு பிரதான கட்சியிடமிருந்து வெளிவர வேண்டிய விடயம். ஆனால் இன்று ஜே.வி.வி.அதனை செய்கின்றது.
அரசாங்கத்துக்குள் இடம்பெறுகின்ற மோசடிகளை அம்பலப்படுத்த வேண்டிய மகத்தான பொறுப்பு எதிர்க்கட்சியைச் சார்ந்தது. கட்சி தலைமையகத்துக்குள் இருந்து கொண்டு கூச்சலிடுவதிலும்,ஏனைய இடங்களில் ஊடக மாநாடு நடத்துவதிலும் அர்த்தமில்லை.அந்தக் காலம் மலையேறிவிட்டது. இது மக்களோடு மக்களாக வீதிகளில் இறங்கி போராட வேண்டிய காலம். அறைகளுக்குள் இருந்து கூச்சலிடுவதை விட்டு விட்டு எதிர்க்கட்சி வீதிகளில் இறங்கி மக்களோடு கைகோர்க்க வேண்டும். இதை நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றோம். அறைகளுக்குள் இருந்து கொண்டு அரசை கவிழ்க்க முடியாது என்பதை ஐ.தே.க. நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
தெவுந்தர சமித் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர். நாட்டுக்குள் போதைப் பொருள்களை இறக்குமதி செய்பவர்களுள் இவர் ஐந்தாம் இடம் வகிக்கின்றார் என்று பொலிஸார் கூறுகின்றனர். இவருக்கு எட்டு மீன்பிடி இழுவை படகுகள், 11 காணிகள், பத்து ஆடம்பர வாகனங்கள,; ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை ஒன்று என்பன உள்ளதாகவும், இவர் ஒரு ஆடம்பர ஹோட்டலை தற்போது நிர்மாணித்து வருவதாகவும் இவரின் சொத்துக்களின் மொத்த பெறுமதி கிட்டத்தட்ட 500 மில்லியன் ரூபாய்கள என்றும் பொலிஸார் கூறுகின்றனர். அப்படியானால் இந்த நாட்டில் முதல் நான்கு இடங்களிலும் உள்ள போதைப் பொருள் மன்னர்கள் யார்? அவர்களின் சொத்துக்களின் பெறுமதி என்ன? இவர்கள் பற்றிய தகவலை ஏன் பொலிஸார் வெளியிடக் கூடாது. அவர்கள் எங்கே உள்ளனர்? நாட்டு மக்களுக்கு ஏன் இவற்றை பொலிஸார் இன்னமும் கூறாமல் உள்ளனர்.?
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளில் தமது பெயர்களைப் பதித்துக் கொள்ளும் உரிமை அரசியல் வாதிகளுக்கு கிடையாது என்று அமைச்சர் டளஸ் அளகப்பெறும தெரிவித்துள்ளார். இது மிகவும் பெறுமதிமிக்க ஒரு கூற்று. நான் மதிப்பளிக்கும் அமைச்சர்களில் ஒருவர் தான் அமைச்சர் டளஸ் அளகப்பெறும. அரச பணம் என்பது மக்களின் பணம். மக்களின் பணத்தால் பூர்த்தி செய்யப்படும் திட்டங்களுக்கு அரசியல்வாதிகள் தமது பெயர்களை சூட்டிக் கொள்வது தார்மிக விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை கவிழ்க்கப் போவது ஐ.தே.க. அல்ல. அரசை அதில் உள்ள அமைச்சர்கள் தான் கவிழ்ப்பார்கள் என்று நான் ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளேன். அது தான் இன்று அமைச்சர் டளஸின் கூற்று. அந்தக் கொந்தளிப்பு உள்ளுக்குள் தொடங்கியுள்ளது. அமைச்சரின் இந்தக் கூற்று நேரடியாக ஜனாதிபதியை குறிவைக்கின்றது என்பதே எனது கருத்தாகும். ஏனெனில் இந்த நாட்டில் ஜனாதிபதியின் பெயரால் இல்லாத ஒன்றே ஒன்று ஒரு மயானமாகும். அது மட்டும் தான் தான் குறை. மக்கள் பணத்தில் செய்யப்பட்ட மற்ற எல்லாவற்றுக்குமே ஜனாதிபதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

MAY BE TRUE
ReplyDelete'நான் தான் கோதபாய ராஜபக்சவுடம் பேசி ஆசாத் சாலியை சிறையில் இருந்து வெளியேற்றினேன்' என்று சொன்ன ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு இவர் கொடுக்கும் 'வெள்ளிப்பரிசு' இதுதானா என்று நாம் இதை கறுத்தில்கொள்ளலாமா...?
ReplyDeleteஇது பெண்ணாம்பெறிய கட்டுரை,வாசிக்கவே நேரமில்லை.
ReplyDeleteஎது எப்படியோ,சுருக்கமாக கேளுங்கள்.முஸ்லிம்கள் என்பதால்,றவூப் ஹகீமை நம்பாமல் இருப்பது முஸ்லிம்களுக்கு நல்லது.
உங்கள் பள்ளி உடைக்கப்பட்ட வேளையில்,கிட்டதட்ட சும்மாதான் இருந்தார்.ஜெனீவா என்று ஒன்றில்லை என்றால்,அறிக்கை கூட கொடுத்திருக்க மாட்டார்.
சட்டம் படித்த அவர்,இந்த ஆசாத் சாலியிடமுள்ள விவேகம்,துனிவு அவரிடமில்லை.எங்கள் தமிழர் இயக்க அரசியல் தலைவர்கள் எல்லாம் இப்போ ஓரளவு பரவாயில்லை.முன்னரைவிட,இப்போ குரல் கொடுக்கிறார்கள்.
குரல்கொடுக்கவும் உங்களுக்கு கஷ்டமென்றால்,இனீ உங்களுக்கு அரசியலே இலாயக்கில்லை.இடத்தை காழிசெய்யுங்கள்.