முஸ்லிங்களாலேயே புறக்கணிக்கப்படும் முஸ்லிம் பாடசாலைகள்...!
(றஸ்மி - கிந்தோட்டை)
இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பள்ளிவாயல்கள் கட்டுவதற்கும், அதனை ஒவ்வொரு நாளும் அலங்காரப்படுத்துவதற்கும், இருக்கின்ற பள்ளிகளை உடைத்துக் கட்டுவதற்கும் அதே போல் கந்தூரி, நோன்புக் கஞ்சி, உழ்ஹிய்யா கொடுப்பதற்கும் காட்டும் அளவுக்கு மீறிய ஈடுபாடு முஸ்லிம் பாடசாலைகளின் வளர்ச்சிக்குக் கொடுக்கப்படுவதில்லை.
முஸ்லிம் பாடசாலைகளின் நிர்வாகங்களைப் பாரமெடுக்கும் பாடசாலை அபிவிருத்தி அமைப்பு, பழைய மாணவர் சங்கம் போன்றன மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பான நல்ல செயற்திட்டகளை உருவாக்கி சமூகத்திடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கும் போது வெரும் ஆயிரம் ரூபா, இரண்டாயிரம் ரூபாக்களை கொடுத்து விட்டு ஆயிரம் கேள்விகள் கேட்கும் தனவந்தர்கள் தொழுகைக்காக நான்கு ஸப்புகள் கூட நிறையாத பள்ளி வாயலை உடைத்து நான்கு மாடிகள் கட்ட பல இலட்ச ரூபாக்களை வழங்குகின்றனர். நான்கு குடும்பங்கள் வாழும் ஊரில் நான்கோடு சேர்த்து ஐந்தாவதாக பள்ளியொன்றைக் கட்ட சமூகம் காட்டும் முனைப்பு அந்த ஊரில் அமைந்துள்ள ஒரே ஒரு பாடசாலையைக் கட்டியெப்ப காட்டப்படுவதில்லை.
இருக்கின்ற பள்ளிவாயல்கள் போதாதற்கு நான்கு பேர் சேர்ந்து ஜூம்ஆ என்ற பெயரில் வீடுகளையும் பள்ளிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். பள்ளிவாயல்களுக்கு நான் எதிரானவன் என்று யாரும் தப்புக் கணக்கு போடக் கூடாது. காலடியிலேயே பல பள்ளி வாயல்கள் இருக்க இன்னும் பள்ளிவாயல்களை உருவாக்க சமூகம் எடுக்கும் முயற்சியை ஏன் அறிவொழி பரப்பும் பாடசாலைக்கு வழங்கப்படுவதில்லை?. பத்து நிமிடத் தொழுகை்கு ஏஸி, சாணுக்கு சாண் fan போடப்படும் பள்ளிவாயல்களைப் போல் ஏன் ஆறு மணித்தியாலங்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு வியர்வை வடிய வடிய கற்றல் கற்பித்தல் நடவடிக்ைககளை மேற்கொள்ளும் ஆசிரிய , மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை? எதற்கு சதகா வழங்க வேண்டும் எதற்கு வழங்கினால் அதிகம் நன்மை என்று மக்கள் பிழையாக புரிந்து வைத்துள்ளமையும் உலமாக்கள் பிழையாக புரிய வைத்துள்ளமையுமே இதற்கான காரணங்களாகும்.
இன்னும் சிலர் தமது பிள்ளைகளை பெரும் பண செலவில் பெரிய அந்நியப் பாடசாலைகளில் சேர்க்கின்றனர். தமது ஊர்ப் பாடசாலையை இழிவாகவும், கேவலமாகவும் பார்க்கின்றனர். எவ்வித இலக்குகளும் இல்லாமல் வெரும் ஆங்கில மாயை காட்டி முஸ்லிம் சமூகத்தில் புற்றீசல்களாக அதிகரித்துள்ள இன்டநெசனல்? பாடசாலைகளுக்கு மாதாந்தம் பல்லாயிரங்களை செலவழித்து பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். ஆனால் ஆங்கிலம் பேசுபவர்களைத்தான் காண முடியவில்லை.
அந்நியப் பாடசாலைகளில் இலட்சக் கணக்கில் செலவழித்து பிள்ளைகளைச் சேர்க்கவும் இன்டநெசனல் பாடசாலைகளுக்கு பல்லாயிரங்களை செலவழிக்கவும் போகும் பணத்தை நன்றாகக் கற்று விட்டு வீடுகளில் சும்மா இருக்கும் பெண் மாணவிகளை பயிற்றுவித்து மாதாந்தம் அவர்களுக்கு ஒரு தொகையை செலுத்தி வந்தால் அந்த கல்வியை பெரிதாக செலவழிக்க முடியாத ஏழை மாணவர்களும் பெற்றுக் கொள்வர். எமது பெண்களுக்கு ஒரு வருமானமும் கிடைக்கும். ஆனால் இப்படி எமது செல்வந்தர்கள் யோசிப்பதில்லை. நான் மட்டும் செலவழத்து ஏன் எல்லோரையும் படிப்பிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான மனப்பாங்கே இதற்கான காரணமாகும். தனது நிதிப் பங்களிப்பில் ஏழை மாணவர்களும் கல்வியைப் பெற்றால் அல்லாஹ் எனக்கு இம்மையிலும் மறுமையிலும் வாரி வாரித் தருவான் என்பதை எமது செல்வந்தர்கள் மறந்து விட்டனர். அதே நேரம் ஏழைகள் என்று தங்களைக் காட்டிக் கொள்வோர் போர்வை , ஜைலானி செல்வதற்கும், கத்தம் பாத்திகா கந்தூரிகளுக்கு காட்டும் சிரத்தையை தனது பிள்ளைகளின் கல்வி வளர்சிசியில் காட்டுவதில்லை. சுறுங்கக் கூறின் முஸ்லிம் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு தடையாக முஸ்லிம்களே காணப்படுகின்றனர் என்பதனை ஐயமின்றிக் கூறலாம்.
யா அல்லாஹ் ! நளீம் ஹாஜியார், ஸம்ஜெம்ஸ் ரிபாய் ஹாஜியார் போன்ற முஸ்லிங்களின் கல்விக்ககாக வாரியிரைக்கும் தனவந்தர்களையும், பதியுதீன் மஹ்மூத் போன்ற அரசியல் வாதிகளையும் எமக்கு தந்தருள் பரிவாயாக !

சரியான கருத்துதான்.....Rasmy... ஆனால் பள்ளிவாசல் அதிகமாக கட்டப்படுவதற்கு மக்கள் காரணமல்ல.... 'இயக்கங்கள்' தான் காரணம் என்பதை ' இங்கு பதிவு செய்கிறேன்.
ReplyDeleteGreat thoughts. Every SL Muslims should read this and work together to put them in actions.
ReplyDelete100% True ..Because in my city a Muslim school forced to close by Muslims. Because it was in masjid land eventhoug there are lot of land space available without use. Now poor Muslim families facing lot of problems to find a school for their children. but those rich people doesn't care because they have money. but i think In sha Allah those people should answer to Allah for destroying poor children's education
ReplyDelete