Header Ads



மாவனல்லை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் கூட்டம்

இலங்கையின் பிரபல முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றான மாவனல்லை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் முதலாவது வருடாந்த பொதுக் கூட்டம் 2014 மார்ச் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு கொழும்பு னு. சு. விஜேவர்தனா மாவத்தையில் அமைந்துள்ள தபால் திணைக்கள தலைமைக் காரியாலய கேற்போர் கூடத்தில் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் வாழும் ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் சகலருக்கும் பணிவான அழைப்பினை விடுப்பதில் நடப்பு வருட நிர்வாக கமிட்டி மகிழ்ச்சியடைகின்றது.

அன்றைய தினம், கொழும்பு கிளையால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை முன்வைக்கப்பட இருப்பதுடன் புதிய நிர்வாக கமிட்டியும் தெரிவு செய்யப்பட இருக்கின்றன. 
         
M. R. M. Hilmy Ishak
Hon. Secretary (2013/2014)
Colombo Branch
Old Boys Association – Zahira College, Mawanella





No comments

Powered by Blogger.