Header Ads



சவூதியிலிருந்து வரும் உறவினரை அழைத்துவர சென்றபோது விபத்து - 4 பேர் வபாத்


நாரம்மல- நீர்கொழும்பு வீதியில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நால்வர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மாத்தளை மாவட்டத்தின் வரகாமுறை மற்றும் உக்குவலை பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சகோதரர்கள் இருவரும் மற்றும் அவர்களது நண்பர் ஒருவரும் முச்சககரவண்டிச் சாரதியுமே இவ்வாறு மரணித்துள்ளனர்.

சவூதியில் இருந்து வருகைத் தர உள்ள தமது உறவினர் ஒருவரை விமாநிலையத்திலிருந்து அழைத்து வரச் சென்ற போதே  இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

Powered by Blogger.