விமானம் குறித்து விசாரணை நடத்தும் குழுவினருக்கு, இலங்கை வான் பரப்பில் நுழைய அனுமதி
காணாமல் போன எம்.எச்.370 விமானம் குறித்து விசாரணை நடத்தும் குழுவினருக்கு இலங்கை வான் பரப்பில் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்கா, மலேசியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் விமானங்களை இலங்கை வான் பரப்பில் விசாரணைக்கு நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கை அரசாங்கம் முன்னதாகவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை உள்ளிட்ட மூன்று ஆசிய நாடுகளின் விமான ஓடுபாதைகள் குறித்த தகவல்களை காணாமல் போயுள்ள மலேசிய விமானத்தின் விமானி ஒருவர் அறிந்து வைத்திருந்தாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment