Header Ads



கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் இறைச்சிக்காக மாடு அறுப்பது தொடர்பான கலந்துரையாடல்


(ஏ.எல்.ஜுனைதீன் )

கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் இறைச்சிக்காக மாடு அறுப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று 12 ஆம் திகதி புதன்கிழமை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.

மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலிஇ பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர்இ மிருக வைத்திய அதிகாரி வட்டப்பொல ஆகியோருடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்இ இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுகள் விற்பனையாளர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் இப்பகுதியிலுள்ள மாடுகள் தினசரி பரிசோதிக்கப்பட்டதன் பிரகாரம்கடந்த  ஒரு வார காலமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குள் எந்தவொரு மாடும் நோய்த் தாக்கத்திற்கு உட்படவில்லை என இதன்போது மிருக வைத்திய அதிகாரியினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கல்முனையில் மாடுகளை விநியோகிக்கும் இடமொன்றுக்கு முதல்வர் தலைமையில் சென்ற அதிகாரிகள் அறுபதுக்கு மேற்பட்ட மாடுகளை நேரடியாக பார்வையிட்டனர்.

இதன்போது குறித்த மாடுகள் யாவும் தேகாரோக்கியத்துடன் இருப்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்நிலைவரம் தொடர்பில் கால்நடைகள் உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு கல்முனை மாநகர முதல்வர் விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பிரகாரம் இன்னும் ஐந்து நாட்களுள் நிலைமையை மேலும் அவதானித்து இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்கவிருப்பதாக முதல்வர்  நிஸாம் காரியப்பர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை மாநகர பிரதேசங்களில் கடந்த  பெப்ரவரி 27ஆம் திகதி தொடக்கம் இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதும் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.